மணிவண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்: இடைவிடாமல் இயங்கிய நடிகர், இயக்குநர், அரசியலர்

0
10
மணிவண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்: இடைவிடாமல் இயங்கிய நடிகர், இயக்குநர், அரசியலர்


699456

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராகவும் கதை-வசன எழுத்தாளராகவும் நடிகராகவும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவரான மணிவண்ணன் பிறந்த நாள் இன்று (ஜூலை 31).

ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் படங்களுக்கும் மணிவண்ணன் நடித்த படங்களுக்கும் இடையிலான எண்ணிக்கை வித்தியாசத்தை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நடிகராக இத்தனை படங்களில் நடிப்பதே இத்தனை அசாத்தியமானது என்றால் ஒரு இயக்குநராகவும் மணிவண்ணனின் வேகமும் உழைப்பும் வியக்கவைக்கும் அளவிளானதுதான். நிறைய படங்களை இயக்கியவர் என்பதோடு காதல், ஆக்‌ஷன், கிரைம், த்ரில்லர், குடும்ப உறவுகள், சமூக பிரச்சினை. அரசியல் என பல வகைமைகளைச் சேர்ந்த படங்களை எழுதி இயக்கியவர் அவர். இந்த ஒவ்வொரு வகைமையிலும் மறக்கவும் மறுக்கவும் முடியாத வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here