Homeசினிமா செய்திகள்மனசு மாறிடாதீங்க ப்ளீஸ்...ராதிகாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்...பாக்யலட்சுமியில் அடுத்து என்ன? | Don't change you mind...Bhagyalakshmi...

மனசு மாறிடாதீங்க ப்ளீஸ்…ராதிகாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்…பாக்யலட்சுமியில் அடுத்து என்ன? | Don’t change you mind…Bhagyalakshmi serial fans pleased Radhika character

bredcrumb

Television

oi-Mohana Priya S

|

சென்னை : ராதிகாவிடம் மனசு மாறி விட வேண்டாம் என பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கெஞ்சி வருகின்றனர். அதோடு சீரியலை பாராட்டியும் வருகின்றனர்.

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. இன்றைய தேதியில் பரபரப்பு, சென்டிமென்ட், த்ரில்லிங் என எதற்கும் பஞ்சமில்லாமல் படு சீரியசாக சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்களும் கதையோடு ஒன்றிப்போய் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெங்காலி, இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் வெற்றி பெற்ற இந்த சீரியல் தற்போது பாக்யலட்சுமி என்ற பெயரில் தமிழில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடுவில் சிறிது நாட்கள் போராடிப்பதை போல் இருந்தாலும், மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டி, டிஆர்பி.,யை எகிற வைத்து வருகிறார்கள்.

நயன்தாராவுக்கு வாழ்த்து கூட சொல்லாத பிரபலங்கள்.. அழைப்பிதழ் கொடுக்கலையா.. அவாய்டு பண்ணிட்டாங்களா?நயன்தாராவுக்கு வாழ்த்து கூட சொல்லாத பிரபலங்கள்.. அழைப்பிதழ் கொடுக்கலையா.. அவாய்டு பண்ணிட்டாங்களா?

பாக்யலட்சுமி சீரியல் கதை

பாக்யலட்சுமி சீரியல் கதை

இன்றைய தேதியில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல் என்றால் அது பாக்யலட்சுமி தான். மூன்று வளர்ந்த பிள்ளைளுக்கு தாயான பாக்யலட்சுமியை மையமாக கொண்டது தான் கதை. பாக்யாவை பிடிக்காமல், ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தையுடன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவரான தனது தோழி ராதிகாவை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் பாக்யாவின் கணவர் கோபி. இதற்காக பல பொய்களை சொல்கிறார். சமீபத்தில் குடி போதையில் ராதிகாவிடம், பாக்யா தான் தன்னுடைய மனைவி என்பதை உளறி விடுகிறார்கள்.

கோபிரை துரத்தியடிக்கும் ராதிகா

கோபிரை துரத்தியடிக்கும் ராதிகா

இதனால் கோபியை வீட்டை விட்டு துரத்துகிறார் ராதிகா. கோபி மீண்டும் மீண்டும் வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தும் ராதிகா, அவரின் சமாதானத்தை ஏற்கவில்லை. அதே சமயம் வீட்டில் இருக்கும் பாக்யாவிற்கு கோபியின் நடவடிக்கைகளில் சந்தேகம் வந்து நேரடியாக கேள்வி கேட்கிறார். இதனால் என்ன செய்வதென தெரியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கிறார் கோபி.

இப்படி நாலு பேரு இருந்தா விளங்கும்

இப்படி நாலு பேரு இருந்தா விளங்கும்

இந்த சமயத்தில் வீட்டிற்கு வரும் ராதிகாவின் அம்மா, நடந்த விஷயங்களை ராதிகாவிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். ஆனால் கோபிக்கு ஆதரவாக ராதிகாவிடம் சண்டை போடுகிறார். தன்னால் பாக்யாவிற்கு துரோகம் செய்ய முடியாது என ராதிகா பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் அவரின் அம்மா மீண்டும் மீண்டும் கோபிக்கு ஆதரவாக பேசி, அவரை ஏற்றுக் கொள்ளும் படி ராதிகாவிற்கு அட்வைஸ் செய்கிறார். இதனால் குழப்பமடைகிறார் ராதிகா. இதனால் அடுத்து என்ன நடக்கும், ராதிகா மனசு மாறி விடுவாறா, ராதிகா – கோபி திருமணம் நடக்குமா, பாக்யா அடுத்து என்ன செய்ய போகிறார் என ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ளீஸ் மனசை மாத்திக்காதீங்க

ப்ளீஸ் மனசை மாத்திக்காதீங்க

பாக்யலட்சுமி சீரியல் மற்றும் அதன் ப்ரோமோக்களை பார்த்து விட்டு, ப்ளீஸ் மனசு மாறிடாதீங்க ராதிகா. இப்போது தான் கதை நன்றாக சென்று கொண்டிருக்கிறது என கெஞ்சி கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு சீரியலை பாராட்டியும், கோபி கேரக்டரை பாராட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர். வில்லன் கேரக்டருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது நம்ம கோபிக்கு தான் என கூறி வருகின்றனர்.

English summary

In Bhagyalakshmi serial, Radhika was upset with Gopi and she hate him. But Radhika’s mother argue with Radhika and accept Gopi. After mother’s advice Radhika is in confusion. Now fans pleased Radhika to don’t change the mind. Meanwhile they appreciate the story line of the serial.

Story first published: Saturday, June 11, 2022, 19:56 [IST]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

சந்திரனுக்கு புதிய பாதையில் பறக்கும் நாசாவின் கேப்ஸ்டோன் விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது

Cislunar Autonomous Positioning System Technology Operations and Navigation Experiment, அல்லது CAPSTONE என்பது, நாசாவின் எதிர்கால ஆர்ட்டெமிஸ் லூனார் அவுட்போஸ்ட் கேட்வேக்காக சந்திரனைச் சுற்றி ஒரு தனித்துவமான சுற்றுப்பாதையில் பறக்கும்...