மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

0
8

மாதந்தோறும் புதியதாக வாங்கப்படும் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதற்கு கடந்த 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம் தான் சாட்சி. கடந்த 2021 செப்டம்பரில் மொத்தம் 38,199 நடுத்தர-அளவு எஸ்யூவி (எடுத்துக்காட்டு: கியா செல்டோஸ்) கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

2020 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 16% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 32,930 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் உண்மையில் கடந்த ஆண்டு செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில், காம்பெக்ட் எஸ்யூவி (எ.கா: ஹூண்டாய் வென்யூ) கார்களின் விற்பனை சற்று அதிகமாகவே கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

2020 செப்டம்பரில் 41,277 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 33,301 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

எஸ்யூவி கார்களுக்கு அடுத்து நம் நாட்டு சந்தையில் கடந்த மாதத்தில் எம்யூவி/ எம்பிவி (எ.கா: மாருதி எர்டிகா) கார்கள் அதிக யூனிட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 24,119 எம்யூவி வகையை சேர்ந்த கார்கள் கடந்த செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 செப்டம்பர் உடன் ஒப்பிடும்போது எம்யூவி கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் சில ஆயிர யூனிட்கள் குறைந்துள்ளது.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (எ.கா: டாடா அல்ட்ராஸ்) கார்கள் இந்த வரிசையில் 22,232 யூனிட்கள் விற்பனை உடன் எம்யூவி-க்கு அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது. 4வது இடத்தை பிடித்திருந்தாலும், கடந்த மாதத்தில் விற்கப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் எண்ணிக்கை 2020 செப்டம்பர் காட்டிலும் 46% குறைவாகும்.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

ஏனென்றால் அந்த மாதத்தில் 40,903 பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையாவது பரவாயில்லை, 2020 செப்டம்பர் மாதத்தில் சுமார் 70,559 காம்பெக்ட் ஹேட்ச்பேக் (மாருதி ஸ்விஃப்ட்) கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2021 செப்டம்பரில் வெறும் 21,768 காம்பெக்ட் ஹேட்ச்பேக் கார்களே விற்கப்பட்டுள்ளன.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

அதேபோல் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் (எ.கா: டாடா டியாகோ) கார்களின் விற்பனையும் கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 45% குறைந்துள்ளது. கடந்த செப்டம்பரில் 17,724 ‘பட்ஜெட்’ ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த அளவிற்கு ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை இந்திய சந்தையில் சரிந்திருப்பதற்கு முக்கிய காரணம், குறைக்கடத்தி பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக மாருதி சுஸுகியின் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடைகளே ஆகும்.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

ஏனெனில் இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு எப்படி ஹூண்டாயோ அதுபோல், மலிவான ஹேட்ச்பேக் கார்கள் எப்போதும் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்தே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறோம். ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை சரிவு இந்த அக்டோபர் மாதத்திலும் தொடரவே வாய்ப்புள்ளது.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

ஏனெனில் இந்த மாதத்திலும் வழக்கமான தயாரிப்பு பணிகளில் இருந்து கிட்டத்தட்ட 40%-ஐ குறைத்து கொள்ளவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்திய சாலைகள் மட்டுமின்றி உலகளவிலான சாலைகள் அனைத்தையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்துவந்த செடான் கார்களை பற்றி இன்னும் கூறவே இல்லை பாருங்கள்.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

இந்திய சந்தையில் செடான் கார்களின் ஆதிக்கம் ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2020 செப்டம்பரிலாவது ஓரளவிற்கு 25 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த அளவில் சிறிய காம்பெக்ட் செடான் (எ.கா: டாடா டிகோர்) கார்கள் கடந்த மாதத்தில் 8.370 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மலிவான ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் எஸ்யூவிகளே அதிகளவில் விற்பனை- 2021 செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரம்

காம்பெக்ட் செடான் கார்களின் விற்பனையாவது பரவாயில்லை, 8 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகிறது. ஹோண்டா சிட்டி போன்ற நிர்வாக செடான் கார்கள் கடந்த மாதத்தில் மொத்தமாகவே 5,842 யூனிட்களும், லக்சரி செடான்கள் வெறும் 269 யூனிட்களும், பிரீமியம் செடான்கள் 227 யூனிட்களும் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், 2020 செப்டம்பரிலும் இந்த செடான் கார்களின் விற்பனை இந்த அளவில்தான் இருந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here