மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்… மிஸ் பண்ணாதீங்க!

0
9
மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்… மிஸ் பண்ணாதீங்க!

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

கொரோனா பிரச்னை காரணமாக, மீண்டும் சில மாதங்களாக கார் விற்பனை படு மோசமாகி இருக்கிறது. தற்போது கொரோனா பிரச்னையிலிருந்து மெல்ல விடுபட்டு வரும் நிலையில், புதிய கார் வாங்க பலரும் திட்டமிட்டுள்ளனர். அந்த வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதமாக, அதிரடி ஆஃபர்களை மஹிந்திரா வழங்குகிறது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

மஹிந்திரா கேயூவி100NXT

மஹிந்திரா நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி மாடலாக விற்பனையில் இருந்து வரும் கேயூவி100NXT எஸ்யூவிக்கு ரூ.61,055 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், ரூ.38,055 விலையில் தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் இருக்கிறது. ரூ.3,000 கார்ப்பரேட் பணியாளர்களுக்கு கூடுதல் டிஸ்கவுண்ட் பெற முடியும்.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு ரூ.44,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு ரூ.5,000 தள்ளுபடியாகவும், ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும். கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்டாக ரூ.4,000 பெறும் வாய்ப்பு இருக்கிறது. கூடுதலாக ரூ.10,000 சிறப்பு சேமிப்புச் சலுகைகளும் உண்டு.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி கார் மாடலாக இருந்து வரும் மராஸ்ஸோ எம்பிவி காுக்கு ரூ.40,200 வரை தள்ளுபடி தரப்படுகிறது. ரூ.20,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும். கார்ப்பரேட் போனஸாக ரூ.5,200 பெற முடியும்.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.36,042 வரை தள்ளுபடியாக பெற முடியும். ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் ரூ.17,042 வரை சிறப்புச் சேமிப்புகளுடன் வழங்கப்படுகிறது. ரூ.4,000 கார்ப்பரேட் போனஸ் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி500

வாடிக்கையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரூ.1.89 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.1.13 லட்சம் வரை விலையில் தள்ளுபடியாகவும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.6,500 வரை கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் தள்ளுபடியாகவும், ரூ.20,000 கூடுதல் சேமிப்புச் சலுகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு பதிலாக விரைவில் புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.16,500 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ3,500 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.3,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெற முடியும்.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவிக்கு ரூ.3.01 லட்சம் வரை அதிரடி ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. இதில், 2.2 லட்சம் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.11,500 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆஃபராகவும், ரூ.20,000 கூடுதல் சேமிப்புச் சலுகைகளாகவும் பெற முடியும்.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

ஆன்லைன் ஆஃபர்

ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக வாங்கும் ஆக்சஸெரீகள் மீது ரூ.3,000 வரை தள்ளுபடி பெற முடியும். வரும் ஜூன் 30ந் தேதி வரை புதிய மஹிந்திரா கார்களை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த ஆஃபர்கள் குறித்த முழுமையான தகவல்களை பெறுவதற்கு அருகாமையிலுள்ள மஹிந்திரா கார் டீலரை தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here