மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்… ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

0
18
மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்… ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

இந்திய சந்தையில் பிஎஸ்-6 குர்காவை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. இந்த ஆஃப் ரோடு எஸ்யூவி கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

இதன்படி வரும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த ஆஃப் ரோடு எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்யும் பணிகள், குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டே ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக குர்கா பிஎஸ்-6 மாடலை அறிமுகம் செய்வதை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பலமுறை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 இந்தியாவில் சோதனை செய்யப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. குர்கா பிஎஸ்-6 மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி இந்த எஸ்யூவியின் முன் பகுதியில் க்ரில் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

மேலும் எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் புதிய ஹெட்லேம்ப்கள், புதிய பம்பர், புதிய டெயில்லைட்கள் என ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் டெயில்கேட் உடன் ஸ்பேர் டயர் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எஸ்யூவியின் உட்புறத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

இதன்படி புதிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றை இந்த எஸ்யூவி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட வட்ட வடிவ ஏர் வெண்ட்களும் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மேம்படுத்தப்பட்ட 2.6 லிட்டர் டீசல் நான்கு சிலிண்டர் இன்ஜினை இந்த எஸ்யூவி பெற்றிருக்கும்.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். இன்ஜின் சக்தியானது, நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படும். இந்திய சந்தையில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியுடன், ஃபோர்ஸ் குர்கா போட்டியிடும்.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருக்கும் சவால்... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 இன்னும் விற்பனைக்கே கொண்டு வரப்படவில்லை. தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு கொண்டே வரும் நிலையில், வெகு விரைவில் ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 மாடலும் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here