மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

0
11
மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

இதனாலேயே இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்திற்கு கிட்டத்தட்ட 1 வருடம் வரையில் காத்திருப்பு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை பெற்ற உரிமையாளர்களில் சிலர் அதனை தங்களுக்கு பிடித்தாற்போல் மாடிஃபை செய்து கொள்வதை இதற்கு முன் பார்த்துள்ளோம்.

மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

இதில் பெரும்பான்மையான மாடிஃபிகேஷன் பணிகள் புதிய வ்ராப்-களாகவே இருந்து வருகின்றன. இந்த வகையில் பளபளப்பான வெள்ளை நிற வ்ராப்-ஐ பெற்ற மஹிந்திரா தாரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

வெள்ளை நிறத்திற்கு தார் வாகனம் ஒன்று மாற்றப்படுவது ஒன்றும் இது புதியது அல்ல. இதற்கு முன்பும் கடந்த ஆண்டு இறுதியில் இதேபோன்று வெள்ளை நிற வ்ராப்-ஐ ஏற்றிருந்த தாரை பற்றி பார்த்திருந்தோம். ஆனால் அதில் வெள்ளை நிறத்துடன் கருப்பு நிறமும் இருந்தது.

மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

இந்த தார் வாகனமும் முழுவதும் வெள்ளை நிறத்தை பெற்றிருந்தாலும், கதவு கைப்பிடிகள், ஹிங்க்ஸ், பொனெட் லாக்குகள் மற்றும் மேற்கூரை உள்ளிட்டவற்றை கருப்பு நிறத்தில் கொண்டுள்ளது. வெள்ளை நிறத்திற்கு கருப்பு நிறம் தான் எடுப்பாக இருக்கும் என்று இவ்வாறான வ்ராப்-களை வடிவமைக்கின்றனர்.

Image Courtesy: The Wrap Team Hyderabad/Instagram

தி வ்ராப் டீம் ஹைதராபாத் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த கஸ்டமைஸ்ட் தார் வாகனம் தொடர்பான வீடியோவினை மேலே காணலாம். வ்ராப் மட்டுமின்றி இந்த தார் வாகனத்தில் வேறு சில புதிய பாகங்களையும் உரிமையாளர் பொருத்தியுள்ளார்.

மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

இதன்படி முன்பக்கத்தில் அங்க்ரி பேர்டு ஸ்டைலில் க்ரில், மோதிரம் போன்றதான டிஆர்எல்களுடன் எல்இடி ப்ரோஜெக்டர் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஃபாக் விளக்குகளும் எல்இடி தரத்தில் உள்ளன. அதேபோல் அலாய் சக்கரங்களும் இரட்டை-நிற அலாய் சக்கரங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

சக்கரத்தில் ப்ரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. இவை இந்த தார் வாகனத்திற்கு சற்று வித்தியாசமான தோற்றத்தை வழங்குகின்றன. பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு இறக்கை கண்ணாடிகள் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

மஹிந்திரா தார் வெள்ளை நிறத்திலா!! உரிமையாளரின் சூப்பரான ஐடியா, இப்படிதான் கஸ்டமைசேஷன் செய்யனும்!

மற்றப்படி வாகனத்தின் உட்புறத்தில் எதாவது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. என்ஜின் அமைப்பும் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவே. இருப்பினும் ஒட்டுமொத்தமாக இந்த கஸ்டமைஸ்ட் தார் வாகனம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கூட்டதில் நின்றிருந்தாலும், இந்த தார் வாகனம் மட்டும் தனியாக தெரியும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here