மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

0
6
மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

குறிப்பாக டேஸ்போர்டின் மீது வழங்கப்படும் தொடுத்திரையை காரை வாங்கும் முன் ஆராய்ந்து பார்ப்பது பல வாடிக்கையாளர்கள் செய்யக்கூடிய விஷயமாகும். அத்தகையவர்களுக்கு உதவியாக, அதிக பேரால் வாங்கப்பட்டு வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களான மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20-இல் வழங்கப்படும் தொடுத்திரைகளுக்கு இடையேயான வித்தியாசத்தையும் ஒற்றுமையையும் தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

அளவில் பெரிய ஹேட்ச்பேக் காரை பெற விரும்புகிறீர்கள் என்றால், இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். பலேனோவை பற்றி கூற வேண்டுமென்றால், மாருதியின் தயாரிப்பான இது ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவில் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக விளங்குகிறது.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

கடந்த ஜூலை மாதத்தில் கூட 14,729 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹூண்டாய் ஐ20 காரை பொறுத்தவரையில் இதன் புதிய தலைமுறை மாடல் கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து இந்த ஹூண்டாய் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

சரி செய்திக்குள் வருவோம், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் நன்கு பெரியதாக 10.2 இன்ச்சில், சில பக்கங்களை கொண்ட தொடுத்திரை வழங்கப்படுகிறது. ஆனால் மாருதி பலேனோவில் 7-இன்ச்சில் தான் திரை கொடுக்கப்படுகிறது. இருப்பினும் இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக, தொடுதல் மூலமாகவே திரையை கண்ட்ரோல் செய்ய வேண்டும்.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

இயற்பியல் முறையில் அழுத்தக்கூடிய பொத்தான்கள் இல்லை. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் சத்த அளவை குறைக்கவும், அதிகரிக்கவும் கூட இவை இரண்டிலும் தொடு கண்ட்ரோல்களே வழங்கப்பட்டுள்ளன. பலேனோவில் சத்தத்தை ஸ்லைடர் அல்லது +/- தொடுப்புள்ளிகள் மூலமாக குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ முடியும்.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

ஆனால் ஐ20 காரில் ஸ்லைடர் வசதி கிடையாது. + மற்றும் – குறியீடு இருக்கும் பகுதியினை தொடுவது மூலமாக சத்த அளவை கண்ட்ரோல் செய்ய முடியும். இருப்பினும் ஐ20-யில் போஸ் பிராண்டின் ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதன் டாப் வேரியண்ட்கள் 7 ஸ்பீக்கர்களை பெறுகின்றன.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

ஆனால் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட பலேனோவில் டாப் வேரியண்ட்களிலும் 6-ஸ்பீக்கர்கள் மட்டுமே பொருத்தப்படுகின்றன. மாருதி பலேனோவில் ஒரு யுஎஸ்பி துளையும், அதற்கு ஏற்ப ஒரு 12 வோல்ட் சாக்கெட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் ஐ20 மாடலில் இரு யுஎஸ்பி துளைகள், இரு 12 வோல்ட் சாக்கெட் உடன் கொடுக்கப்படுகின்றன.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

இவற்றுடன் வயர் இல்லா சார்ஜிங் வசதியை முக்கிய அம்சமாக ஐ20 பெற்று வருகிறது. ஆனால் பலேனோவில் கூடுதல் ஆக்ஸஸரீகள் வரிசையில் மட்டுமே வயர் இல்லா சார்ஜர்கள் இடம்பெறுகின்றன. அதாவது இதற்காக கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும் இந்த வசதி தற்போது கூடுதல் ஆக்ஸஸரீயாக கூட பலேனோவில் வழங்கப்படுவதில்லையாம்.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகளை இந்த இரு பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களும் கொண்டுள்ளன. இத்தகைய வசதியை பலேனோ தான் முதன்முதலாக அதன் டாப் வேரியண்ட்களில் பெற்றுவந்தது. இத்தகைய மொபைல் போன் இணைப்பு வசதியுடன், வயர் மூலமான இணைப்பு வசதியையும் இவ்விரு கார்கள் பெறுகின்றன.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

ஐ20 மாடல் மட்டுமே வயர் இல்லாமலேயே மொபைல் போனை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் இணைக்கும் வசதியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஹூண்டாய் காரிலும் அதன் மத்திய ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களில் மட்டுமே இந்த வயர் இல்லா இணைப்பு வசதி வழங்கப்படுகிறது.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

பலேனோவை அப்டேட் செய்தால் நிச்சயம் இத்தகைய மாடர்ன் வசதிகளை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். வருங்கால கார்களில் கூகுள் & ஆப்பிள் வரைப்படங்கள், நாவிகேஷன் உள்ளிட்டவை சாதாரணமான விஷயங்களாக இருக்கும். ஆனால் தற்போது இவற்றை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் மாடல் மட்டுமே பெறுகிறது.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

மாருதி பலேனோவில் நாவிகேஷன் வசதியை மட்டுமே மொபைல் போனின் உதவியுடன் பெற முடிகிறது. மொபைல் போன் இணைப்பிற்கு அடுத்து கார்களை இணைக்கும் கார் இணைப்பு தொழிற்நுட்பத்துடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை எதிர்பார்க்க வாடிக்கையாளர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

நாம் இந்த செய்தியில் பார்த்து கொண்டிருக்கின்ற இரு பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் புவி-வேலி (ஜியோ-ஃபென்சிங்), ஆர்எஸ்ஏ, கார் பயண & டிரைவிங் குறிப்புகள், அவசரகால எச்சரிக்கை மற்றும் நேரலையான வாகன நிலைப்பாடு போன்ற அடிப்படையான இணைக்கப்பட்ட இணையத்தை கொண்டுள்ளன.

மாருதி பலேனோவின் தொடுதிரையா? அல்லது ஹூண்டாய் ஐ20 காரின் தொடுதிரையா? எதில் பணத்தை சேமிக்கலாம்?

எங்களுக்கு தெரிந்தவரையில் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார்களின் தொடுத்திரைகளை பற்றிய முக்கிய விபரங்களை கூறியுள்ளோம். இனி டீலர்ஷிப் ஷோரூமிற்கு நேரடியாக சென்று இந்த கார்களின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை ஆராய்ந்து பார்த்து தேர்வு செய்வதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here