நடிகர் தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் பழையபடி மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்' படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் நடிகர் தனுஷ். இதையடுத்து தனது 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் 'வேலையில்லா பட்டதாரி', 'காக்கி சட்டை', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'நானும் ரௌடிதான்', 'விஐபி 2', 'வடசென்னை', 'மாரி 2' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.