Tuesday, September 27, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்


முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது? என்ற கேள்விக்கு அனைவராலும் மிக எளிமையாக பதில் வழங்கி விட முடியும். இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் அந்த பெருமையை தன்வசம் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் டாடா அளவிற்கு வேறு எந்த நிறுவனத்தாலும் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடியவில்லை.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

இந்திய சந்தையில் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) என இரண்டு பிரபலமான பயணிகள் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான், வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. எனவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை அது தன்வசம் வைத்துள்ளது.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

இந்த சூழலில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகிய 2 கார்களின் மேம்படுத்தப்பட்ட 2022 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக நடப்பு ஏப்ரல் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு சில முறை செய்தி நிறுவனங்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பியது.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

அவை 2022 நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் 2022 டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றுக்கான அழைப்பிதழ்கள் என கருதப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு ஏப்ரல் மாதம் 2 எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்களை காட்சிப்படுத்தியது. அவை டாடா கர்வ் மற்றும் டாடா அவ்னியா ஆகும்.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

இது வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை தந்தாலும் கூட, 2022 நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் 2022 டிகோர் எலெக்ட்ரிக் கார்களுக்காக காத்திருப்பவர்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற கேள்வி மீண்டும் எழ தொடங்கியது. இந்த கேள்விக்கு தற்போது நமக்கு பதில் கிடைத்து விட்டது.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

ஆம், 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வரும் மே 11ம் தேதி (May 11) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

அதே நேரத்தில் 2022 டிகோர் எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் 2022 நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, 2022 டிகோர் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2KWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. மறுபக்கம் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 26kWh பேட்டரி தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இதில், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

அதே நேரத்தில் டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 306 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2022 நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் 2022 டிகோர் எலெக்ட்ரிக் கார் என இரண்டு புதிய மாடல்களிலும் பெரிய 40kWh லித்தியம்-அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 400 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க கூடிய திறன் வாய்ந்ததாக இந்த பேட்டரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான தகவல்கள் நமக்கு தெரியவரும். புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்தாலும் கூட, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்களின் தற்போதைய மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

எனவே குறைவான ரேஞ்ச் இருந்தால் கூட போதும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் பழைய மாடலையும், அதிக ரேஞ்ச் வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் புதிய மாடலையும் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்! இந்தியாவே காத்து கிடக்கும் டாடா எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்

தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான், இந்திய சாலைகளில் நீங்கள் அதிகம் பார்க்க கூடிய எலெக்ட்ரிக் காராக இருக்கும். எனவேதான் இதன் அப்டேட் செய்யப்பட்ட மாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்போது விற்பனைக்கு வந்து விடும், அப்போது விற்பனைக்கு வந்து விடும் என ஏராளமான யூகங்கள் வெளியாகி வந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஒரு வழியாக சஸ்பென்ஸ்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.





Source link

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading