Home Sports விளையாட்டு செய்திகள் முதல் டெஸ்டில் மூன்று சிக்கல்கள் ! எப்படி சமாளிக்கப் போகிறார் இந்திய கேப்டன் ரஹானே?

முதல் டெஸ்டில் மூன்று சிக்கல்கள் ! எப்படி சமாளிக்கப் போகிறார் இந்திய கேப்டன் ரஹானே?

0
முதல் டெஸ்டில் மூன்று சிக்கல்கள் ! எப்படி சமாளிக்கப் போகிறார் இந்திய கேப்டன் ரஹானே?

[ad_1]

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்திய அணியில் முக்கியமான வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் கோலி கூட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் விளையாடுகிறார். அதனால் அணியை முதல் போட்டியில் ரஹானே, கேப்டனாக வழிநடத்துகிறார். 

image

இந்த நிலையில் அவருக்கு இந்த போட்டியில் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் பெரிய சிக்கல் இருக்கக்கூடும் என சொல்லப்பட்டு வருகிறது. 

தொடக்க வீரர்கள் யார்?

இந்திய அணியின் பிரதான தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஷூப்மன் கில் ஆகிய வீரர்கள் உள்ளனர். இதில் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவது உறுதி. அவரது பார்ம் தான் அதற்கு காரணம். ஆனால் இப்போது கே.எல்.ராகுலும் காயம் காரணமாக விலகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

image

இதனால் இப்போது எந்தெந்த வீரர்களை தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்குவது என்ற குழப்பம் ரஹானேவுக்கு எழுந்துள்ளது. இருப்பினும் அவர் மயங்க் அகர்வால் இடம் அந்த ரோலை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வீரராக சுப்மன் கில்லை களமிறக்கலாம்.

image

கில் அல்லது ஷ்ரேயஸ் ஐயர்?

தொடக்க வீரராக கில் களம் இறங்கவில்லை என்றால் அவர் மிடில் ஆர்டரில் களம் இறங்குவார் என சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை அவருக்கு அந்த பேட்டிங் பொசிஷனில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனால் ஷ்ரேயஸ் ஐயர் மிடில் ஆர்டரில் களம் இறங்குவார் என சொல்லப்படுகிறது. 

பவுலிங் யூனிட்டில் யார் யார்?

image

கான்பூர் டெஸ்டில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த விரும்பினால் அது அஷ்வின் மற்றும் ஜடேஜாவாக மட்டுமே இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஷ்வின், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பதால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு உறுதியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

[ad_2]

Source link

puthiyathalaimurai.com

Web Team

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here