முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது… ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

0
19
முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது… ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

நாட்டின் தலைநகர் டில்லியை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் கோமகி. இது மின் வாகன தயாரிப்பை மட்டுமே மையமாக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிறுவனமே தற்போது முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பயன்படுத்துகின்ற வகையிலான ஓர் இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்திருக்கின்றது.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு அதிகரித்து வருகின்றது. பெருமளவில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வில் இருந்து மக்களைக் காக்கும் ஓர் வர பிரசாதமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் காட்சியளிக்கின்றன. இத்துடன் சுற்றுச் சூழலுக்கும் மிகவும் பாதுகாப்பான ஓர் வாகனமாக அவை செயல்படுகின்றன.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

எனவேதான் யூனியன் மற்றும் மாநிலம் ஆகிய இரு அரசுகளும் இணைந்து மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றது. அண்மையில்கூட பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கி வரும் மானியத்தொகையை உயர்த்தி அறிவித்தது.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

அரசுகளின் இந்த மாதிரியான ஊக்குவிப்பு முயற்சிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவ்வப்போது இந்திய மின் வாகன சந்தையை புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களால் அலங்கரித்து வருகின்றன.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

அந்தவகையிலேயே டெல்லியை மையமகாக் கொண்டு இயங்கும் கோமகி நிறுவனம் கோமகி எக்ஸ்ஜிடி எக்ஸ்5 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை அறிமுகம் செய்துள்ளது. இது மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பயன்படும் வகையில் பின்பக்கத்தில் மூன்று சக்கரங்களைக் கொண்ட ஸ்கூட்டராகும்.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

இது இரு விதமான தேர்வுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். விஆர்எல்ஏ ஜெல் பேட்டரி வேரியண்ட் மற்றும் லித்தியன் அயன் பேட்டரி வேரியண்ட் என இரு விதமான தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ஜெல் பேட்டரி தேர்வுக்கு ரூ. 72,500 என்ற விலையும், லித்தியம் அயன் பேட்டரி வேரியண்டிற்கு ரூ. 90,500 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இரு தேர்வுகளிலுமே பின் பக்கத்தில் மூன்று சக்கரங்கள் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிக பேலன்ஸை வழங்கும் நோக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்க வீலிலும், ட்வின் ஷாக் அப்சார்பர் பின் பக்க வீலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

தொடர்ந்து, 60வோல்ட்/ 72வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டாரும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாருக்கான மின்சார திறனை 20-30ஏஎச் திறன் கொண்ட (விஆர்எல்ஏ ஜெல் மற்றும் லித்தியன் அயன் இரண்டும் ஒரே வோல்ட் திறனுடையவை) பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

இந்த பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 8 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இத்துடன், கூடுதலாக ரிவர்ஸ் பார்க் வசதியும் இ ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் எளிதில் ஸ்கூட்டரை பார்க் மற்றும் ரிவர்ஸ் செய்ய இது மிக உதவியாக இருக்கும்.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

தொடர்ந்து, மெக்கானிக்கல் பார்க்கிங் பிரேக், ரீஜெனரேட்டிவ் பிரேக் மற்றும் ரிப்பெயிர் ஸ்விட்சு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இத்துடன் மதிப்புகூட்டப்பட்ட வசதிகளாக திருட்டை தவிர்க்க உதவும் கருவி, செல்போன் சார்ஜிங் பாயின்ட், டிஸ்க் பிரேக் மற்றும் எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்டவையும் கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

ரேஞ்ஜ் திறன்:

கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 80 கிமீ தூரம் முதல் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். தற்போது இந்த சூப்பர் திறன் கொண்ட ஸ்கூட்டரையே கோமகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து தற்போது புக்கிங் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளது. ஏற்கனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆயிரம் யூனிட் வரை புக்கிங் கிடைத்துவிட்டதாக ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு ஏற்றது... ரிவர்ஸ் பார்க் வசதியுடன் கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

மாற்று திறனாளிகள் மற்றும் முதியோரைக் பயன்படும் வகையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவே ஆகும். ஆகையால், இந்தியாவில் கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்5 மின்சார ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகள் மற்றும் குறைந்த விலையில் இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

குறிப்பு: முதல் மூன்று படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here