மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே மாடலின் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் செய்யபட்டது

0
16
மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே மாடலின் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் செய்யபட்டது


மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே பற்றி...

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே பற்றி…

ஸ்டைலான சொகுசு கார்களுக்கு இடையே உள்ள போட்டியை இன்னும் தீவிரபடுத்த, மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் கேப்ரியோலே என்ற மாடலை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிகழ்த்தபட்டது. மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே மாடலானது, எஸ்-கிளாஸ் கூபே மாடலின் உடன்பிறப்பு மாடல் போன்றதாகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் வகை – ட்வின் – டர்போசார்ஜ்ட் வி8

இஞ்ஜின் கொள்ளளவு – 4.7 லிட்டர்

பவர் – 453 பிஹெச்பி

டார்க் – 700 என்எம்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலேவின் 4.7 லிட்டர் ட்வின் – டர்போசார்ஜ்ட் வி8 இஞ்ஜின், 9 – ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே, லிட்டருக்கு 11.75 கிலோமீட்டர் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

எஸ்-கிளாஸ் கூபேவின் பல்வேறு டிசைன் அம்சங்கள், மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே மாடலில் ஏற்று கொள்ளபட்டுள்ளது. மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே கனமாக செதுக்கபட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் எண்ட்கள் கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே ஃப்ரண்ட், தெளிவாக தெரியக்கூடிய வகையிலான மெர்சிடிஸ் 3-பாயிண்ட் ஸ்டார் பேட்ஜ் ப்ரண்ட் மற்றும் செண்டர் உடைய பெரிய கிரில் கொண்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், இதன் ப்ரண்ட் பகுதி, டேடைம் ரன்னிங் லைட்களுடன் ஒருங்கிணைந்த ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. இதன்

வளைந்த ரியர் எண்ட், எல்ஈடி விளக்குகளுடன் இணைக்கபட்டுள்ள பெரிய அளவிலான குரோம் பூச்சு உள்ளது. மேலும், இதன் பூட் பகுதியும் ஒரு சிறிய ஸ்பாய்ளர் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

(*) தெர்மோட்ரானிக் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம்

(*) ஏர் டிஃப்ளெக்டர் மற்றும் ஏர்-ஸ்கார்ஃப் நெக்-லெவல் ஹீட்டிங்

(*) ஹீட்டட் சீட்கள், ஆர்ம் ரெஸ்ட்கள் மற்றும் ஸ்டியரிங் வீல்

சாஃப்ட் டாப் ரூஃப்;

சாஃப்ட் டாப் ரூஃப்;

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே, 3-நிலைகளில் ஆன அக்கௌஸ்டிக் சாஃப்ட் டாப் ரூஃப் (மென்மையான மேற் கூரை) உள்ளது. இது மனிக்கு 60 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் திறந்து கொள்ளும் மற்றும் மூடிகொள்ளும் திறன் கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலேவின் சாஃப்ட் டாப் ரூஃப், பிளாக், டார்க் புளூ மற்றும் டார்க் ரெட் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே, ஏராளமான ஏர்பேக்குகள், ஈபிடி உடன் கூடிய ஏபிஎஸ், கொள்ளிஷன் ப்ரிவென்ஷன் (விபத்தை தடுக்கும் வசதி), ஆட்டோமேட்டட் டிரைவிங் மற்றும் நைட் விஷன் கேமரா ஆகிய பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே மாடலுக்கு முக்கிய போட்டியாக பென்ட்லீ கான்டினென்டல் ஜிடிசி மாடல் தான் விளங்குகிறது.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே, இந்த ஆண்டின் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபடலாம்.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here