மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

0
8
மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

2030ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற திட்டமிட்டுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வரும் வருடங்களில் வெளிவரவுள்ள பேட்டரி-எலக்ட்ரிக் மெர்சிடிஸ் வாகனங்களை ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.

மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

இதன்படி இக்யுஇ, இக்யுஎஸ் என்ற எஸ்யூவிகள் மற்றும் ஜி-கிளாஸின் எலக்ட்ரிக் வெர்சன் உள்ளிட்ட எலக்ட்ரிக் மாடல்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து வரும் வருடங்களில் அடுத்தடுத்ததாக வெளிவரவுள்ளன. மேலும் இவற்றுடன் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் மேபக் வெர்சனும் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

இதில் இக்யுஇ மற்றும் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் அடுத்த 2022ஆம் ஆண்டிலும், இக்யுஎஸ் எலக்ட்ரிக் காரின் மேபக் வெர்சன் அதனை தொடர்ந்தும் வெளிவரும் என சமீபத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் & விற்பனை பிரிவின் முதன்மை அதிகாரி பிரிட்டா சீகெர் தெரிவித்திருந்தார்.

மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

இந்த நிலையில் தான் தற்போது மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எலக்ட்ரிக் மேபக் கார், மெர்சிடிஸின் எவா ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (100%- 0% பேட்டரி சார்ஜ்) 770கிமீ அளவில் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. பெரிய ஹெட்லைட்களுடன் இந்த எலக்ட்ரிக் காரின் வெளிப்பக்க நிறம் மற்ற மேபக் மாடல்களை போன்று கொண்டுவரப்பட்டாலும், முன்பக்க மூக்கு பகுதி இக்யுஎஸ் லக்சரி செடான் காரை போன்று அதிக வெற்றிடத்துடன் இருக்கும்.

மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

முன்பக்கம் மட்டுமின்றி மற்ற வெளிப்புற ஸ்டைலிங் பாகங்களையும் மேபக் இக்யூஎஸ் எலக்ட்ரிக் கார், மெர்சிடிஸ் இக்யுஎஸ் செடான் காரில் இருந்தே பெறும் என தெரிகிறது. இவற்றின் தொடர்ச்சியாக, பேட்டரி தொகுப்புகளும் இக்யுஎஸ் எலக்ட்ரிக் காரில் இருந்தே இந்த மேபக் காருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

இக்யுஎஸ் எலக்ட்ரிக் செடானில் வழங்கப்படும் 90kWh மற்றும் 108kWh பேட்டரிகளை 300கிமீ தூர பயணத்திற்கு தேவையான ஆற்றலுக்கு, 200 கிலோவாட்ஸ் விரைவு சார்ஜரின் மூலம் வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினாலே போதும்.

மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

பேட்டரிகளுடன் எலக்ட்ரிக் மோட்டாரும் இக்யுஎஸ் செடான் மாடலில் இருந்தே மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு பகிர்ந்து வழங்கப்படலாம். ஆனால் மேபக் மாடல் என்பதை நியாயப்படுத்துவதற்காக உட்புற கேபின் இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் மிகவும் லக்சரி தோற்றத்தில் இருக்கும்.

மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் வருகையை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ்!! 770கிமீ ரேஞ்ச்சா?

இதனால் நிச்சயம் முழு டேஸ்போர்டையும் ஆக்கிரமித்து கொள்ளும் மெர்சிடிஸ் எம்பக்ஸ் ‘ஹைப்பர்திரை’ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை மேபக் இக்யுஎஸ் எலக்ட்ரிக் காரிலும் எதிர்பார்க்கலாம். மெர்சிடிஸ் இக்யுஎஸ் எஸ்யூவி காரை பொறுத்தவரையில், 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலகளவில் வெளியிடப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு 2022ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொண்டுவரப்படலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here