மொதல்ல லாரன்ஸ்.. இப்போ விஜய்சேதுபதி.. கமலின் விக்ரம் படத்தில் இருந்து கழண்டு கொள்ள அதுதான் காரணமா? | Vijay Sethupathi exit from Kamal Haasan’s Vikram for this reason only?

0
18
மொதல்ல லாரன்ஸ்.. இப்போ விஜய்சேதுபதி.. கமலின் விக்ரம் படத்தில் இருந்து கழண்டு கொள்ள அதுதான் காரணமா? | Vijay Sethupathi exit from Kamal Haasan’s Vikram for this reason only?


கமலின் விக்ரம்

கமலின் விக்ரம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகவுள்ள அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம்ட் ஹான் விக்ரம். டைட்டில் டீசரிலேயே ஆரம்பிக்கலாங்களா என விருந்து வைத்து வெயிட் காட்டி இருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

வெளியேறிய லாரன்ஸ்

வெளியேறிய லாரன்ஸ்

இந்த படத்தில் முதன்முறையாக கமலுக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. புது காம்பினேஷன் பக்கா மிரட்டலாக இருக்குமே என எதிர்பார்த்த கமல் ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமாக சில பல காரணங்களுக்காக அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்கிற தகவல் வெளியானது.

பகத் ஃபாசில்

பகத் ஃபாசில்

இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா உடன் பாட்டு படத்தில் நடித்து வரும் பகத் ஃபாசில் இன்னமும் விக்ரம் படத்தில் நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதியும் எஸ்கேப்

விஜய்சேதுபதியும் எஸ்கேப்

பகத் ஃபாசில் மட்டுமில்லை நடிகர் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கமலுடன் இணைந்து நடிக்கப் போவதாக வெறித்தனமான அப்டேட்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் இருந்து எஸ்கேப் ஆகி உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

சம்பளம் பத்தல

சம்பளம் பத்தல

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லன் பவானியாக மிரட்டிய விஜய்சேதுபதி மீண்டும் லோகேஷ் படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார் என்கிற தகவலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்நிலையில், விஜய்சேதுபதிக்கு பேசப்பட்ட சம்பளம் போதுமானதாக இல்லை என்கிற காரணத்திற்காகவே அவர் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும்

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும்

ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் கமல் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்து விட்டார் நடிகர் விஜய்சேதுபதி. சிம்பு, சித்தார்த் என பேச்சுக்கள் அடிபட்டு அந்த படமே கடைசியில் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தலைவன் இருக்கின்றான் படத்திலும் விஜய்சேதுபதி நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், விக்ரம் படத்தில் கூட விஜய்சேதுபதி கமலுடன் இணைந்து நடிக்கப் போவது இல்லையாம்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here