Home Sports விளையாட்டு செய்திகள் யூரோ கால்பந்து போட்டித் தொடரில் வேல்ஸ் – சுவிஸ் இன்று மோதல் | wales vs swiss

யூரோ கால்பந்து போட்டித் தொடரில் வேல்ஸ் – சுவிஸ் இன்று மோதல் | wales vs swiss

0

[ad_1]

செய்திப்பிரிவு

Published : 12 Jun 2021 07:00 am

Updated : 12 Jun 2021 07:50 am

 

Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:50 AM

wales-vs-swiss

பாகு

யூரோ கால்பந்து தொடரில் இன்று மாலை பாகு நகரில் நடைபெறும் ஆட்டத்தில் வேல்ஸ் – சுவிட்சர்லாந்து அணிகளும் கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் டென்மார்க் – பின்லாந்து அணிகளும் மோதுகின்றன.

16-வது யூரோ கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் உள்ள 11 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அஜர்பைஜானின் பாகு நகரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள வேல்ஸ் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. வேல்ஸ் அணி கடைசியாக பிரான்ஸ், அல்பேனியா அணிக்கு எதிராக விளையாடிய நட்புரீதியிலான ஆட்டத்தில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

அதேவேளையில் சுவிட்சர்லாந்து அணி தனது கடைசி இரு நட்புரீதியிலான ஆட்டங்களில் 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் 7-0 என்ற கோல் கணக்கில் அண்டை நாடான லிச்சென்ஸ்டீனையும் தோற்கடித்தது. அதிகபட்சமாக 2016-ம் ஆண்டு யூரோ தொடரில் வேல்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. அந்தத் தொடரில் சுவிட்சர்லாந்து அணி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறியிருந்தது.

வேல்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் அனைத்து விதமான போட்டிகளிலும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 ஆட்டங்கள் நட்புரீதியிலானது, 4 ஆட்டங்கள் 2000 மற்றும் 2012-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கால்பந்து தகுதி சுற்றில் மோதியவை ஆகும். இவற்றில் 5 ஆட்டங்களில் சுவிட்சர்லாந்தும், 2 ஆட்டங்களில் வேல்ஸ் அணியும் வெற்றி பெற்றிருந்தன. யூரோ கால்பந்து தொடரில் இந்த இரு அணிகளும் தற்போதுதான் நேருக்கு நேர் மோதுகின்றன.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள டென் மார்க் – பின்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 59 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டென்மார்க் 38 ஆட்டங்களிலும், பின்லாந்து 11 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. 10 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன.

நள்ளிரவு 12.30 மணிக்கு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் ரஷ்யா – பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டிகள் அனைத்தும் சோனி சிக்ஸ் மற்றும் சோனி டென் 4 சானலில் நேரலை செய்யப்படுகிறது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here