HomeSportsவிளையாட்டு செய்திகள்யூரோ கோப்பை: கால்இறுதிக்கு தகுதி பெறும் அணி எது? பெல்ஜியம் - போர்ச்சுகல் இன்று மோதல்...

யூரோ கோப்பை: கால்இறுதிக்கு தகுதி பெறும் அணி எது? பெல்ஜியம் – போர்ச்சுகல் இன்று மோதல் | Portugal vs Belgium in Euro cup knock out today | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Portugal-vs-Belgium-in-Euro-cup-knock-out-today

யூரோ கோப்பையில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சமபலம் வாய்ந்த போர்ச்சுகல் – பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

பெல்ஜியம் லீக் சுற்றில் ரஷ்யா, டென்மார்க், பின்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து 3 வெற்றிகளுடன் 2-வது சுற்றுக்கு வந்துள்ளது. பலமான அணியாக உருவெடுத்துள்ள பெல்ஜியம் இதுவரை உலகக் கோப்பை மற்றும் யூரோ கோப்பை எதையும் வென்றதில்லை. பெல்ஜியம் அணியில் ரோம்லு லுகாகு, ஈடன் ஹசார்ட், கெவின் டி புருன், ஆக்சல் விட்செல் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக வலம் வருகிறார்கள்.

image

உலக தரவரிசையில் 5-து இடம் வகிக்கும் போர்ச்சுகல் அணி லீக் சுற்றில் ‘குரூப் ஆப் டெத்’ எனப்படும் கடின பிரிவில் இடம் பிடித்திருந்தது. ஹங்கேரியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த போர்ச்சுகல் அதன் பிறகு ஜெர்மனியிடம் 2-4 என்ற கோல் கணக்கில் அடிவாங்கியது. உலக சாம்பியன் பிரான்சுக்கு எதிரான கடைசி லீக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்து தனது பிரிவில் 4 புள்ளியுடன் 3-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமான பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ள ரொனால்டோவுக்கு கோல் வேட்கை மட்டும் இன்னும் தணியவில்லை. மொத்தத்தில் சரிசம பலத்துடன் இவ்விரு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. வெற்றி பெறும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும்.

image

இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு சந்தித்துள்ளன. இதில் 6-ல் போர்ச்சுகலும், 5-ல் பெல்ஜியமும் வெற்றி பெற்றன. எஞ்சிய 7 ஆட்டம் டிராவில் முடிந்தது. 1989-ம் ஆண்டுக்கு பிறகு பெல்ஜியம் அணி போர்ச்சுகலை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 32 ஆண்டுகளில் போர்ச்சுகலுடன் 5 முறை மோதியுள்ள பெல்ஜியம் அதில் 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read