Homeதமிழ் Newsஆரோக்கியம்ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!

ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!


தமிழ் சினிமாவில் சில வித்யாசமான சென்டிமென்டுகள் ஒர்க்-அவுட் ஆவதுண்டு. அவருடன் நடித்தால் ஹிட், இவர் இசையமைத்தால் ஹிட், இவர் தயாரித்தால் ஃப்ளாப் என இதில் பல வகைகள் உண்டு.

“தமிழ் சினிமாவுல மட்டும்தானா; ஏன், தெலுங்கு சினிமாவுல இதுமாதிரி இருக்கக்கூடாதா, நாங்க மட்டும் என்ன தொக்கா?” எனக் கேட்கும் விதமாக புது சென்டிமென்ட் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார் ராஜமெளலி.

“மதுரை, சட்னிக்குத்தானே ஃபேமஸ்; கிட்னிக்குமா ஃபேமஸு?” எனும் டயலாக் கணக்காக, ‘பிரமாண்டப் படத்துக்கு மட்டும்தானே ராஜமெளலி ஃபேமஸு; இப்போ இந்த சென்டிமென்டுக்குமா ஃபேமஸு?’ எனக் கேட்க வைத்திருக்கிறது ‘அந்த’ சென்டிமென்ட். அட, அப்படி என்னதாங்க அந்த சென்டிமென்ட்; எனக்கே அதைத் தெரிஞ்சிக்கணும்போல இருக்கு எனக் கேட்கிறீர்களா? மேல படிங்க!

                                                 Rajamouli

அதாவது, ராஜமெளலியைப் பொறுத்தவரை தென்னிந்தியப் படங்களுக்கான பிஸ்னஸையே மாற்றியமைத்த டைரக்டர்களுள் முக்கியமான ஒருவர் எனச் சொல்லலாம். தென்னிந்தியப் படங்களை வர்த்தக ரீதியாகவும் பான் – இந்தியா அளவில் கொண்டுசென்று ஜெயிக்கமுடியும் எனத் தொடர்ந்து நிரூபித்துவரும் ராஜமெளலி இந்தியாவே திரும்பிப் பார்க்கும் டைரக்டர்களுள் ஒருவராக மாறியுள்ளார். அதேபோல அவர் படங்களில் நடிக்கும் ஹீரோக்களும் இந்திய அளவில் கவனம் பெறுகின்றனர்.

எல்லாம் நல்லாத்தானே இருக்கு; அப்புறம் என்ன இதில் பிரச்சினை எனக் கேட்கிறீர்களா? இனிமேதான் பிரச்சினையே ஸ்டார்ட் ஆகிறதாம். அதாவது, ராஜமெளலியின் படத்தில் நடிக்கும் ஒரு ஹீரோவின் அடுத்த படங்கள் ஃப்ளாப் ஆகிறதாம். இது அச்சு பிசகாமல் தொடர்ச்சியாகவும் நடக்கிறதாம்.

                                               RRR poster

உதாரணமாக, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஆந்திராவாலா, கந்த்ரி ஆகிய படங்கள் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லையாம். அதேபோல ராம்சரணுக்கு ஆரஞ்ச், ரவிதேஜாவுக்கு கதர்நாக்,  பிரபாஸுக்கு பெளர்ணமி மற்றும் சாஹோ ஆகிய படங்களுக்கும் இதே நிலைதானாம். இந்த எல்லா படங்களுமே ராஜமெளலியின் படங்களில் நடித்த பின் அடுத்ததாக வெளியான படங்கள்.

மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஷான்வி ஜோடியானது எப்படி?!

அண்மையில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் நல்ல கவனத்தைப் பெற்றது. ஆனால் ராம்சரண் நடிப்பில் தற்போது அடுத்ததாக வெளியாகியுள்ள ஆச்சார்யா படம் பெரிதாக எடுபடவில்லை என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

                                                   Prabhas

மிஸ் ஆகாமல் தொடரும் இந்த சென்டிமென்டால் தற்போது அனைவரது கவனமும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள அவரது 30ஆவது படத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அந்தப் படமாவது இந்த மோசமான சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா எனும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | மும்பை இந்த தடவை Playoffக்குப் போகுமா, போகாதா?! – எதுதான் உண்மை?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read