Saturday, December 4, 2021
Homeதமிழ் Newsஆட்டோமொபைல்ராயல் என்பீல்டின் ‘தி பிக்னிக் ஸ்பெஷல்’ & ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ ஹெல்மெட்கள்!! விற்பனைக்கு...

ராயல் என்பீல்டின் ‘தி பிக்னிக் ஸ்பெஷல்’ & ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ ஹெல்மெட்கள்!! விற்பனைக்கு அறிமுகம்


ராயல் என்பீல்டின் ‘தி பிக்னிக் ஸ்பெஷல்’ & ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ ஹெல்மெட்கள்!! விற்பனைக்கு அறிமுகம்

உலகின் பழம்பெறும் மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுள் ஒன்றான ராயல் என்பீல்டு வெற்றிக்கரமாக தனது 120 வருடங்களை நிறைவு செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாகவே மொத்தம் 12 விதமான நேர்த்தியான டிசைன்களில் லிமிடெட்-எடிசன் ஹெல்மெட்களை வாரத்திற்கு இரண்டு என்கிற வீதத்தில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்து வருகிறது.

ராயல் என்பீல்டின் ‘தி பிக்னிக் ஸ்பெஷல்’ & ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ ஹெல்மெட்கள்!! விற்பனைக்கு அறிமுகம்

12 விதமான டிசைன்களில் ஹெல்மெட்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 12 தசாப்தங்களை குறிக்கின்றன. அதாவது இந்த 120 வருடங்களில் ஒவ்வொரு 10 வருடங்களிலும் சந்தையில் ட்ரெண்டாக இருந்த டிசைன்களை குறிப்பதாகும். இதன்படி சில தினங்களுக்கு முன்பு, தி ஒரிஜினல் ராயல் என்பீல்டு மற்றும் வி ட்வின் என்ற ஹெல்மெட்களை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இவை இரண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் அன்றே விற்று தீர்ந்தன.

ராயல் என்பீல்டின் ‘தி பிக்னிக் ஸ்பெஷல்’ & ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ ஹெல்மெட்கள்!! விற்பனைக்கு அறிமுகம்

இதனை தொடர்ந்து தற்போது மேலும் இரு புதிய ஹெல்மெட்களை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தி உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் 1901இல் முதன்முதலாக இங்கிலாந்தில் தனது செயல்பாடுகளை துவங்கியது. கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள் 1901-இல் இருந்து 1920 வரையிலான ஆண்டுகளில் பிரபலமாக இருந்த ஹெல்மெட் டிசைன்களில் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

ராயல் என்பீல்டின் ‘தி பிக்னிக் ஸ்பெஷல்’ & ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ ஹெல்மெட்கள்!! விற்பனைக்கு அறிமுகம்

புதிய தி பிக்னிக் ஸ்பெஷல் ஹெல்மெட் ஆனது 1920-இல் இருந்து 1930ஆம் ஆண்டு வரையிலான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வருகிற அக்டோபர் 30ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மற்றொரு மாடலான, பெர்த் ஆஃப் தி புல்லட் ஹெல்மெட் 1930களில் பிரபலமாக இருந்த ஹெல்மெட்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அக்.31இல் இருந்து விற்பனைக்கு கிடைக்குமாம்.

ராயல் என்பீல்டின் ‘தி பிக்னிக் ஸ்பெஷல்’ & ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ ஹெல்மெட்கள்!! விற்பனைக்கு அறிமுகம்

ராயல் என்பீல்டு பிரபலமான மாடல்களுள் ஒன்றாக விளங்கும் புல்லட்-ஐ 1930களில் தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ என்ற பெயரினை ராயல் என்பீல்டு நிறுவனம் சூட்டியுள்ளது. இந்த பிரத்யேகமான ஹெல்மெட்களை வாங்குவது சற்று கடினம் தான். ஏனெனில் இவை இரண்டும் தலா 120 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

ketika sharma: పూరి జగన్నాథ్ కాబట్టి కాదనలేం!.. నాలాంటి వాళ్లను భరించడం కష్టం.. కేతిక శర్మ నాటీ...

ప్రధానాంశాలు:రొమాంటిక్ బ్యూటీ కేతిక శర్మలక్ష్య సినిమాతో మరోసారి రచ్చపూరి జగన్నాథ్‌పై కేతిక కామెంట్లురొమాంటిక్ సినిమాతో కేతిక శర్మ కుర్రాళ్ల గుండెలను గిలిగింతలు పెట్టేసింది. సినిమా విడుదల కాక ముందే కేతికకు భారీ...