Saturday, December 4, 2021
Homeதமிழ் Newsஆட்டோமொபைல்ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு...

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்


ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

நடுத்தர-அளவு எஸ்யூவி காராக, அதிகளவில் விற்பனையாகி வரும் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள எம்ஜி அஸ்டர் இந்தியாவின் முதல் தனிப்பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பிரிவின்-முதல் தானியங்கி (நிலை-2) தொழிற்நுட்பத்தை கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

மேலும், கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பம் மற்றும் அருமையான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எம்ஜி அஸ்டர், பிரிமீயம் தரத்திலான மிட்-சைஸ் எஸ்யூவி காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு விதமான வேரியண்ட்களில் இந்த புதிய எம்ஜி காரினை தேர்வு செய்யலாம்.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

இதில் அறிமுக ஆரம்ப விலையான ரூ.9.78 லட்சம் (எக்ஸ்-ஷோரும்) என்பது மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வை கொண்ட ஸ்டைல் வேரியண்ட்டின் விலையாகும். சூப்பர் வேரியண்ட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.28 லட்சத்தில் இருந்தும், ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலை ரூ.12.98 லட்சத்தில் இருந்தும், டாப் ஷார்ப் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.13.98 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

Style Super Smart Sharp
VTi-Tech MT ₹9,78,000 ₹11,28,000 ₹12,98,000 ₹13,95,000
VTi-Tech CVT ₹12,68,000 ₹14,18,000 ₹14,98,000
220 Turbo AT ₹15,88,000 ₹16,78,000

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

எம்ஜி அஸ்டருக்கு நிலையாகன் 3-3-3 தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வருட/ முடிவிலா கிமீ-கள், 3-வருட சாலையோர உதவிகள் மற்றும் 3 பணியாளர்-கட்டணமில்லா சேவைகள் அடங்குகின்றன. தனித்துவமான மை எம்ஜி ஷீல்ட் திட்டத்தின் மூலம், அஸ்டர் வாடிக்கையாளர்கள் தங்கள் உரிமையாளர் தொகுப்பை உத்தரவாத நீட்டிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களுடன் தேர்ந்தெடுத்து தனிப்பயனாக்க நெகிழ்வுத்தன்மையை பெற முடியும்.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

அஸ்டருக்கு உரிமையாளராகுவதற்கான தொகை ஒரு கிமீ-க்கு 47 பைசா மட்டுமே என்கிறது எம்ஜி நிறுவனம். மேலும், அஸ்டரை பிரிவிலேயே முதல்முறையாக 3-60 திட்டத்துடன் கொண்டுவந்துள்ளனர். இதன்படி அஸ்டர் உரிமையாளர்கள் தங்களது மாதத்தவணைகள் அனைத்தையும் செலுத்திய பின்னர், 3 வருடங்கள் கழித்து காரை டீலர்ஷிப்பிடமே விற்கும்போது காருக்கான விலையில் சுமார் 60% தொகையினை திரும்ப பெற முடியும். இதற்காக கார்தேக்கோ நிறுவனத்துடன் எம்ஜி மோட்டார் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds