ரெண்டாவது பாட்ட ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்… உங்களுக்கு போட்டுக் காட்டணும்… யுவன் அப்டேட் | Yuvan Shankar Raja gives update on Dhanush’s Naane Varuven

0
12
ரெண்டாவது பாட்ட ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்… உங்களுக்கு போட்டுக் காட்டணும்… யுவன் அப்டேட் | Yuvan Shankar Raja gives update on Dhanush’s Naane Varuven


நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

நடிகர் தனுஷ் மற்றும் அவரது சகோதரர் இயக்குநர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் காம்போவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ல் துவங்கவுள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தாணு பெருமிதம்

தாணு பெருமிதம்

மேலும் அவர் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து லாப்டாப்பில் ஒரு சீனை பார்ப்பது போல அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் இந்த கூட்டணியுடன் பணியாற்றுவது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

2வது பாடல்

2வது பாடல்

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். முன்னதாக செல்வராகவனுடன் 8வது முறையாக இணைவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நானே வருவேன் படத்தின் இரண்டாவது பாடலுக்காக தான் தற்போது பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14ல் அறிவிப்பு

ஜனவரி 14ல் அறிவிப்பு

மேலும் அந்த பாடல்களை படக்குழுவினருக்கு போட்டுக் காட்ட ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நானே வருவேன் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி 14ல் வெளியானது. அப்போது வெளியான பர்ஸ்ட் லுக்கில் பின்புலத்தில் பெரிய வீடு எரிந்துக் கொண்டிருக்கையில் தனுஷ் சிகரெட் பிடித்தபடி சிரித்துக் கொண்டிருப்பது போன்று காணப்பட்டார். இந்த போஸ்டர் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here