லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

0
8

இந்த வகையில் பார்த்தோமேயானால், 10 வருடங்களை அவெண்டடோரின் அறிமுகத்தில் லம்போர்கினி நிறுவனம் கடந்துள்ளது. இந்த 10 வருடங்களில் கிட்டத்தட்ட நான்கு வெர்சன்களில் அவெண்டடோர் கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

எல்பி 700-4, சூப்பர்வெலோஸ், எஸ் மற்றும் எஸ்விஜே என்பன இந்த நான்கு வெர்சன்கள் ஆகும். இந்த 10 ஆண்டுகளில் இந்த நான்கு மாடல்கள் மூலம் லம்போர்கினி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள தொழிற்நுட்ப பாகங்கள் பல.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

அதில் முக்கியமான சிலவற்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். முதல் அவெண்டடோர் எல்பி 700-4, கார்பன் ஃபைபர் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட காராகும். இதன் மூலம் அதிகளவில் கார்பன் ஃபைபர் பாகங்களை தயாரித்த முதல் நிறுவனம் என்ற பெயரை லம்போர்கினி பெற்றது.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

நான்கு-சக்கர ட்ரைவ் மூலம் ஓட்டுனருக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க நம்பகமான டிரான்ஸ்மிஷன் வேண்டும் என்பதை மற்ற ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு உணர்த்தியதும் லம்போர்கினி அவெண்டடோர் தான். அதுமட்டுமின்றி அப்போதே புஷ் ராட் சஸ்பென்ஷன் அமைப்பையும் பெற்றுவந்தது.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

ஃபார்முலா-1 ஆல் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த சஸ்பென்ஷன் அமைப்பில் ஒவ்வொரு சக்கரத்தின் மைய பகுதிக்கு கீழ் ராட்கள் இணைக்கப்பட்டன. அவெண்டடோர் சூப்பர்வெலோஸில் இந்த சஸ்பென்ஷன் அமைப்பில் சாலையின் தன்மைக்கும் டிரைவிங் ஸ்டைலிற்கும் ஏற்ப செயல்படும் காந்தவியல் அதிர்ச்சி உறிஞ்சிகள் இணைக்கப்பட்டன.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

சுதந்திரமான ஷிஃப்ட்டிங் ராட் தொழிற்நுப்டத்தால் அவெண்டடோர் கார்களில் கியர் மாற்றங்கள் உண்மையில் வேகமாக உள்ளன. இதன் விளைவாகவே சூப்பர்வெலோஸில் கியர் மாற்றம் வெறும் 50 மில்லிவினாடிகள், அதாவது மனிதன் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிகிறது.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

அதுமட்டுமின்றி ஓட்டுனர் தனது டிரைவிங் ஸ்டைலிற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்து கொள்வதிலும் லம்போர்கினி அவெண்டடோர் பரிணாம வளர்ச்சி கண்டிருந்தது. எல்பி 700-4 காரின் டிரைவிங் மோட்கள் ஐந்து விதமான ஸ்டைலில் கியர்பாக்ஸை வழங்குகின்றன.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

மறுபக்கம், அவெண்டடோர் எஸ் காரில் ஸ்ட்ராடா, ஸ்போர்ட், கோர்ஸா மற்றும் ஈகோ என்ற நான்கு டிரைவிங் மோட்கள் கொடுக்கப்படுகின்றன. அவெண்டடோர் மாடலின் மூலம் பயன்பாட்டிற்கு வந்த மற்றொரு கண்டுப்பிடிப்பு, டைனமிகா வீகோலோ அட்டிவா கண்ட்ரோல் யூனிட்.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

டிராக்‌ஷன் மற்றும் வாகன ஹேண்ட்லிங்கில் வேகமான மற்றும் துல்லியமான கண்ட்ரோலை வழங்கும் இந்த தொழிற்நுட்பம் முதன்முதலில் அவெண்டடோர் எஸ் காரில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த தொழிற்நுட்பத்தின் இரண்டாவது வெர்சன் அவெண்டடோர் எஸ்விஜே காரில் அறிமுகமானது.

லம்போர்கினி அவெண்டடோருக்கு வயது 10!! இந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகிற்கு கொடுத்துள்ள தொழிற்நுட்பங்கள் இத்தனையா!

இவற்றுடன் அனைத்து-சக்கர ஸ்டேரிங், ஸ்டாப்-ஸ்டார்ட் அமைப்பு மற்றும் சிலிண்டர் செயலிழப்பு அமைப்பு என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகிறது. லம்போர்கினி கார்களை காளை என்பார்கள். அப்படியென்றால், அவெண்டடோர் தான் அதில் முக்கியமான காளை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here