வயது முதிர்வு காரணமாக.. பிரபல முன்னாள் ஹீரோயின் காலமானார்.. திரையுலகம் இரங்கல்! | Yesteryear’s Bollywood actress Kumkum dies

0
71
வயது முதிர்வு காரணமாக.. பிரபல முன்னாள் ஹீரோயின் காலமானார்.. திரையுலகம் இரங்கல்! | Yesteryear’s Bollywood actress Kumkum dies


நடனக் கலைஞர்

நடனக் கலைஞர்

குருதத் மற்றும் கிஷோர் குமாருடன் அதிக படங்களில் நடித்துள்ளார். குரு தத் அறிமுகப்படுத்திய இவர், கதக் நடனக் கலைஞர். குருதத் இயக்கிய ஆர் பார் (1954) படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடினார். பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். மிஸ்டர் எக்ஸ் இன் பாம்பே, மதர் இண்டியா, சன் ஆப் இண்டியா, கோகினூர், உஜாலா, நயா தார், கங்கா கி லஹரன். ராஜா அவுர் ரங், ஆங்கென் உட்பட பல படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது.

உடல்நிலை பாதிப்பு

உடல்நிலை பாதிப்பு

போஜ்புரி மொழியில் உருவான முதல் படத்தில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய அவர் அங்கும் தொடர்ந்து நடித்து வந்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

அருமையான மனிதர்

அருமையான மனிதர்

பாலிவுட் பிரபலங்கள், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் மறைந்த நடிகர் ஜக்தீப்பின் மகன் நவேத் ஜாப்ரி வெளியிட்டுள்ள இரங்கலில், ‘இன்னொரு ரத்தினத்தை நாம் இழந்திருக்கிறோம். எனது சிறுவயதில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். சிறந்த நடிகை, அருமையான மனிதர் என்று கூறியிருக்கிறார். பழம்பெரும் நடிகர் ஜானி வாக்கர் மகன் நசிர் கான் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இர்பான் கான்

இர்பான் கான்

கடந்த சில மாதங்களாக, பாலிவுட்டில் அதிகமான மரணங்கள் நடக்கின்றன. ஏப்ரல்

மாத இறுதியில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இர்பான் கான் மரணமடைந்தார். அடுத்து பிரபல நடிகர் ரிஷிகபூர் மறைந்தார். பின்னர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீஷ் உள்பட சில நடிகர்கள் உயிரிழந்தனர். இப்போது பழம்பெரும் நடிகை கும்குமும் உயிரிழந்துள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here