வாணி போஜன் நடிக்கும்… மலேசியா டூ அம்னீசியா… டிரைலர் ரிலீஸ் ! | Malaysia To Amnesia Trailer out

0
41
வாணி போஜன் நடிக்கும்… மலேசியா டூ அம்னீசியா… டிரைலர் ரிலீஸ் ! | Malaysia To Amnesia Trailer out


பல படங்களில்

பல படங்களில்

சீரியலில் படு பிஸியாக நடித்து வந்த வாணிபோஜன் ஓ மை கடவுளே திரைப்படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, காசிமேடு என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஜெய்யுடன்

ஜெய்யுடன்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் நடித்திருந்தார். இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மே28ந் தேதி ரிலீஸ்

மே28ந் தேதி ரிலீஸ்

வைபவுடன் லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வாணி போஜன் மீண்டும் வைபவுடன் இணைந்து மலேசியா டூ அம்னீசியா படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மொழி பட இயக்கிய ராதா மோகன் இயக்கி உள்ளார். இப்படம் ஜீ5 ஒடிடி தளத்தில் மே28 ந் தேதி வெளியாக உள்ளது.

நகைச்சுவை படம்

நகைச்சுவை படம்

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரன், சச்சு, ரியா சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் வைபவ் ஒரு அம்னிஷியா நோயாளியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் வைபவின் மாமனாராக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக அமைந்துள்ளது. மேலும், ரியா சுமன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here