Specials
oi-Vinoth R
சென்னை: தனது நேச்சுரல் ஆன நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விமல்
சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்
இந்த நிலையில் விஜய் சேதுபதியால் தான் தனக்கு அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என நடிகர் விமல் மனம் திறந்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்
கடன் பிரச்சனையால் தான் நடிக்க வந்தேன்.. நடிகர் சூர்யா வெளிப்படையாக கூறிய தகவல்!

ஹீரோவாக அறிமுகமானார்
முறையாக நடிப்பு பயிற்சி பெற்று திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் விஷால் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மிகப் பெரிய திரை பின்புலம் இல்லாமல் தனது சொந்த முயற்சியின் மூலம் போராடி ஹீரோவாக ஆன விமல் நடித்த களவாணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று விமலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் உண்டானது

வாகைசூடவா நல்ல பெயரை
இந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்த விமலுக்கு வாகைசூடவா நல்ல ஒரு பெயரை பெற்றுத் தந்ததோடு இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றது. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விமல் ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளை கொடுக்க ஆரம்பித்தார் . இந்த நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு வர நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல் புரூஸ்லீ பட இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் தொடரில் நடித்து அசத்தியிருப்பார்.விலங்கு வெப் தொடர் கொடுத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நெருங்கிய நண்பர்களாக
நடிப்பு பயிற்சி பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே விஜய்சேதுபதி விமலும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் விஜய் சேதுபதியால் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என நடிகர் விமல் தனியாக யூட்யூப் சேனல் நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார்.

உனக்கு செட் ஆகும்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி முதலில் ஆடிசன் சென்றுள்ளார் ஆனால் விஜய் சேதுபதி செலக்ட் ஆகவில்லை இந்த நிலையில் விமலை சந்தித்த போது இயக்குனர் பாண்டிராஜ் புது படம் ஒன்றை இயக்க இருக்கிறார் ஆடிசன்க்கு நான் போயிருந்தேன் செட்டாகவில்லை. அவர் கூறியது தகவல்களை வைத்துப் பார்க்கும் பொழுது அந்த கதாபாத்திரம் உனக்கு செட் ஆகும் என நினைக்கிறேன் நீ போய் இயக்குனர் பாண்டிராஜ் ஆபீஸில் பாரு என விஜய் சேதுபதி தான் எனக்கு கூறினார் அதன் பிறகு இயக்குனர் பாண்டிராஜ் சாரை சந்தித்து ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி பசங்க படத்தில் நடித்தேன். இந்த அரிய தகவலை பல ஆண்டுகளுக்கு விஜய் சேதுபதி தனக்கு செய்த உதவியை நினைவுகூர்ந்து தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் நடிகர் விமல் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
English summary
I have become Hero Because of Vijay Sethupathi says Actor Vimal
Story first published: Saturday, June 11, 2022, 12:39 [IST]