Home சினிமா செய்திகள் `வித்யா நம்பர் 1' தொடரில் இருந்து விலகிய இனியன்; காரணம் இதுதான்!'

`வித்யா நம்பர் 1' தொடரில் இருந்து விலகிய இனியன்; காரணம் இதுதான்!'

0
`வித்யா நம்பர் 1' தொடரில் இருந்து விலகிய இனியன்; காரணம் இதுதான்!'

[ad_1]

‘யூடியூபராக நம்மிடையே அறிமுகமானவர் இனியன். அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘வித்யா நம்பர் 1′ தொடரின் மூலமாக கதாநாயகனாக சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்!’

இனியன் – புவி

ஷூட்டிங்கின் போது அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்காக மூன்று வாரங்களுக்கும் மேலாக கேரளாவில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம் இனியன். அவர் தொடரில் இருந்து விலகியிருப்பதால் அவருக்கு பதிலாக ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியல் கதாநாயகன் புவியரசு இந்தத் தொடரில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே `அழகிய தமிழ்மகள்’, `ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ போன்ற தொடர்களில் நடித்தவர் புவியரசு. மக்களிடையே புவியாக பிரபலமான இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `ஹஒரு ஊருல 2 ராஜகுமாரி’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனியன் – புவி

இனியன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தனக்கு விபத்து ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கேரளாவில் இருப்பதாகவும், விரைவிலேயே வீடியோக்களை அவருடைய யூடியூப் பக்கத்தில் பதிவேற்றுவதாகவும் அவருடைய ரசிகர்களிடையே தெரிவித்திருக்கிறார்’.

[ad_2]

Source link

cinema.vikatan.com

வெ.வித்யா காயத்ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here