விராட், புஜாரா, ரகானே அடுத்தடுத்து விக்கெட் – தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய அணி | WTC Final Indian players battling to save the match against New Zealand in England | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

0
11

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் கடைசி நாளான இன்று தோல்வியை தவிர்க்க இந்திய வீரர்கள் களத்தில் போராடி வருகின்றனர். இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். 

நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரோகித் ஷர்மா இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இருப்பினும் எஞ்சியிருந்த 8 விக்கெட்டுகளுடன் கடைசி நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. ஆனால் நிலைத்து நின்று விளையாட வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் கோலி, புஜாரா மற்றும் ரகானே விக்கெட்டுகளை இழந்தனர். அது அப்படியே ஆட்டத்தை நியூசிலாந்து பக்கமாக திருப்பியுள்ளது. தற்போது களத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா உள்ளனர். இருவரும் பெரிய இன்னிங்சை ஆட வேண்டிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களை தவிர்த்து இந்திய அணியின் பேட்ஸ்மேனாக அஷ்வின் உள்ளார். அவரை தவிர்த்து மற்ற அனைவரும் பவுலர்கள்.

image

இந்தியா தற்போதைக்கு 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளது. அதை 200 முதல் 250 ரன்கள் வரை மாற்றினால் ஆட்டத்தை டிரா செய்ய அல்லது வெற்றி பெற இந்தியா முயற்சிக்கும். தற்போது உணவு இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் 28, ஜடேஜா 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here