விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

0
27

கொரோனா வைரஸினால் தற்சமயம் நாடு முழுவதும் நிலவும் சூழலை பற்றி நான் கூற வேண்டிய அவசியமே இல்லை. ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், மெல்ல ஏற்றம் கண்டுவந்த வாகன விற்பனை மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளது.

விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

ஏனெனில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளதால் அந்த மாநிலங்களில் டீலர்ஷிப் ஷோரூம்கள் இயக்கத்தில் இல்லை. தொழில் நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின்படி, மிகவும் குறைவான தொழிலாளர்களை கொண்டே இயக்கி வருகின்றன.

விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

இப்போதாவது எவ்வளவோ பரவாயில்லை, ஏனென்றால் 2020 ஏப்ரலில் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்ததால் ஒரு வாகனம் கூட விற்பனை செய்யப்படவில்லை. கடந்த 2021 ஏப்ரல் மாத மோட்டார்சைக்கிள் விற்பனையில் வழக்கம்போல் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

கடந்த மாதத்தில் மட்டும் 1,93,508 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2021 மார்ச் மாதத்தை காட்டிலும் 34.63 சதவீதம் அதிகமாகும்.

விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

ஏனெனில் அந்த மாதத்தில் 1,43,736 ஸ்பிளெண்டர் பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் ஹோண்டா ஆக்டிவாவின் விற்பனை முந்தைய மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.43% குறைந்துள்ளது.

விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா கடந்த மாதத்தில் 1,09,678 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா சிபி ஷைன் 79,416 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

Rank Model Apr-21 Mar-21 Growth (%)
1 Hero Splendor 1,93,508 1,43,736 34.63
2 Honda Activa 1,09,678 1,14,757 -4.43
3 Honda CB Shine 79,416 86,633 -8.33
4 Hero HF Deluxe 71,294 1,14,969 -37.99
5 Bajaj Pulsar 66,586 51,454 29.41
6 Suzuki Access 53,285 26,476 101.26
7 Bajaj Platina 35,467 21,264 66.79
8 TVS Apache 29,458 21,764 35.35
9 TVS XL 25,977 32,808 -20.82
10 TVS Jupiter 25,570 21,001 21.76

விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

முதலிடத்திற்கு பிறகு நான்காவது இடத்திலும் ஹீரோ தயாரிப்பாக எச்எஃப் டீலக்ஸ் 71,294 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் எச்எஃப் டீலக்ஸ் கடந்த மார்ச் மாதத்தில் 1,14,969 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இத்தகைய லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

66,586 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட பஜாஜ் பல்சர் மாடல்கள் ஐந்தாவது இடத்தில் உள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி ஐந்து இடங்களில் சுஸுகி ஆக்ஸஸ், பஜாஜ் பிளாட்டினா, டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் எக்ஸ்எல், டிவிஎஸ் ஜூபிட்டர் மாடல்கள் உள்ளன.

விற்பனையில் தொடரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் ஆதிக்கம்!! இரட்டிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை

இதில் கமர்ஷியல் பயன்பாட்டு இருசக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தின் விற்பனை மட்டுமே 20.82 சதவீதம் குறைந்துள்ளது. மற்றவை அனைத்தின் விற்பனையும் 2021 மார்ச்சை காட்டிலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை மார்ச்சை காட்டிலும் இரட்டிப்பாகியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here