Homeதமிழ் Newsஆட்டோமொபைல்விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

விலையை ஏத்த மட்டும் செய்யல… குறைக்கவும் செஞ்சிருக்காங்க… டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கும் மலிவு விலை கார் மாடல்களில் பஞ்ச்-ம் ஒன்று. இந்த கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்டுகளின் விலையை உயர்த்தியும், சில வேரியண்டுகளின் விலையை குறைத்தும் டாடா தற்போது நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

டாடா பஞ்ச் ஓர் ஐந்து இருக்கை வசதிக் கொண்ட மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இக்கார் தற்போது எம்டி மற்றும் ஏஎம்டி ஆகிய இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்விரு தேர்வுகளின் விலையையும் 1.06 சதவீதம் தொடங்கி 2.64 சதவீதம் வரை டாடா உயர்த்தியிருக்கின்றது.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

இதன் விளைவாக டாடா பஞ்ச் காரின் ஆரம்ப விலையே ரூ. 5,82,900 ஆக உயர்ந்துள்ளது. விற்பனைக்கு வந்த புதிதில் இக்காரின் விலை வெறும் ரூ. 5.49 லட்சமாக இருந்தது. தொடர் விலையுயர்வின் காரணத்தினால் தற்போது அதன் விலை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. இதேபோல், பஞ்சின் உயர்நிலை தேர்வின் விலையும் உயர்ந்துக் காணப்படுகின்றது.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

ரூ. 9,48,900க்கு அதன் உயர்நிலை தேர்வு தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்வாறு எட்டு தேர்வுகளின் விலையை உயர்த்தியும், எட்டு தேர்வுகளின் விலையை குறைத்தும் டாடா அதிரடியை காட்டியிருக்கின்றது.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

விலை உயர்த்தப்பட்ட தேர்வுகளின் விபரம்:

ப்யூர் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலையில் ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை தற்போது ரூ. 5.82 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. ப்யூர் ரிதம் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலையிலும் ரூ. 15,000 உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், இதன் விலை ரூ. 6.14 லட்சமாக உயர்ந்துள்ளது.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

இதேபோல், மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற தேர்வுகளான அட்வென்சர், அட்வென்சர் ரிதம், அக்காம்ப்ளிஷ் ஆகியவற்றின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதில், அட்வென்சர் மற்றும் அட்வென்சர் ரிதம் தேர்வுகளின் விலையில் ரூ. 12 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அக்காம்ப்ளிஷ் தேர்வின் விலையில் ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது அட்வென்சர் மேனுவல் ரூ. 6.64 லட்சத்திற்கும், அட்வென்சர் ரிதம் 6.99 லட்சத்திற்கும், அக்காம்ப்ளிஷ் ரூ. 7.49 லட்சம் விற்கப்படுகின்றது.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

இதனைத் தொடர்ந்து ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் அட்வென்சர், அட்வென்சர் ரிதம், அக்காம்ப்ளிஷ் ஆகிய தேர்வுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. ரூ. 7 ஆயிரம் தொடங்கி ரூ. 12 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

விலை குறைவு செய்யப்பட்டிருக்கும் தேர்வுகளின் விபரம்:

டாடா மோட்டார்ஸ், பஞ்ச் கார் மாடலின் கிரியேட்டீவ், கிரியேட்டீவ் டிடி, கிரியேட்டீவ் ஐஆர்ஏ, கிரியேட்டீவ் ஐஆர்ஏ டிடி ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் மேனுவல் மற்றும் தானியங்கி இரண்டின் விலைகளையும் குறைத்திருக்கின்றது. அனைத்து தேர்வுகளின் விலையிலும் ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

விலை உயர்வு செய்யப்படாத தேர்வுகளும் பட்டியலில் உள்ளன. அவை, அக்காம்ப்ளிஷ் டேஸில், பஞ்ச் காஸிரங்கா எடிசன், காஸிரங்கா எடிசன் ஐஆர்ஏ ஆகியவற்றின் மேனுவல் மற்றும் தானியங்கி தேர்வுகளின் விலையையும் டாடா உயர்த்தவில்லை.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

விலை உயர்வு மற்றும் குறைப்பு செய்யப்பட்டிருக்கும் மேனுவல் தேர்வுகளின் விபரம் பட்டியலாகக் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பஞ்ச் எம்டி புதிய விலை பழைய விலை வித்தியாசம்
Pure ₹5,82,900 ₹5,67,900 ₹15,000
Pure Rhythm ₹6,14,900 ₹5,99,900 ₹15,000
Adventure ₹6,64,900 ₹6,52,900 ₹12,000
Adventure Rhythm ₹6,99,900 ₹6,87,900 ₹12,000
Accomplished ₹7,49,900 ₹7,42,900 ₹7,000
Accomplished Dazzle ₹7,87,900 ₹7,87,900 0
Creative ₹8,31,900 ₹8,41,900 -₹10,000
Creative DT ₹8,41,900 ₹8,51,900 -₹10,000
Kaziranga ₹8,58,900 ₹8,58,900 0
Creative IRA ₹8,61,900 ₹8,71,900 -₹10,000
Creative IRA DT ₹8,71,900 ₹8,81,900 -₹10,000
Kaziranga IRA ₹8,88,900 ₹8,88,900 0

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

தானியங்கி தேர்வின் எந்தெந்த வேரியண்டின் விலை குறைப்பு மற்றும் உயர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரம் பட்டியலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்ச் தானியங்கி புதிய விலை பழைய விலை வித்தியாசம்
Adventure ₹7,24,900 ₹7,12,900 ₹12,000
Adventure Rhythm ₹7,59,900 ₹7,47,900 ₹12,000
Accomplished ₹8,09,900 ₹8,02,900 ₹7,000
Accomplished Dazzle ₹8,47,900 ₹8,47,900 0
Creative ₹8,91,900 ₹9,01,900 -₹10,000
Creative DT ₹9,01,900 ₹9,11,900 -₹10,000
Kaziranga ₹9,18,900 ₹9,18,900 0
Creative IRA ₹9,21,900 ₹9,31,900 -₹10,000
Creative IRA DT ₹9,31,900 ₹9,41,900 -₹10,000
Kaziranga IRA ₹9,48,900 ₹9,48,900 0

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

டாடா பஞ்ச் ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை இவ்வாகனம் பெற்றது. அதிக பாதுகாப்பு வசதிக்காக ட்யூவல் ஏர் பேக், இபிடி வசதியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை டாடா பஞ்சில் வழங்கியிருக்கின்றது.

விலையை ஏத்த மட்டும் செய்யல... குறைக்கவும் செஞ்சிருக்காங்க... டாடாவோட வழி எப்பவுமே தனிதான்!

டாடா மோட்டார்ஸின் விலை உயர்வு நடவடிக்கை அதன் அனைத்து பயணிகள் கார் மாடல்களுக்கும் பொருந்தும். நிறுவனம் தற்போது நெக்ஸான், சஃபாரி, ஹாரியர், டியாகோ, டிகோர், அல்ட்ராஸ் மற்றும் டிகோர் இவி, நெக்ஸான் இவி உள்ளிட்ட கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவை அனைத்தும் விலைகளும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read