Home Sports விளையாட்டு செய்திகள் வெங்கடேஷுக்கு பந்துவீசும் திறமை இருக்கு: ரோஹித் சர்மா பேட்டி | ind vs NZ, 3rd T20I: Good to see Venkatesh Iyer bowling those overs with skills he has, says Rohit Sharma

வெங்கடேஷுக்கு பந்துவீசும் திறமை இருக்கு: ரோஹித் சர்மா பேட்டி | ind vs NZ, 3rd T20I: Good to see Venkatesh Iyer bowling those overs with skills he has, says Rohit Sharma

0
வெங்கடேஷுக்கு பந்துவீசும் திறமை இருக்கு: ரோஹித் சர்மா பேட்டி | ind vs NZ, 3rd T20I: Good to see Venkatesh Iyer bowling those overs with skills he has, says Rohit Sharma

[ad_1]


இந்த தொடரோடு முடிந்துவிடாமல் அடுத்தடுத்து தொடர்ந்து முன்னேறுவது அவசியம். வெங்கடேஷ்அய்யருக்கு பந்துவீசும்திறமை இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 17.2ஓவர்களில் 111 ரன்களில் ஆட்டமிழந்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 2-வது டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றிய பெருமையைப் பெறுகிறது. கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை வென்றநிலையில் அடுத்த நடந்த இந்தத் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.

இந்திய அணிக்கு முழுநேரக் கேப்டனாகப் பதவி ஏற்றுள்ள ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோரின் வழிகாட்டலுக்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.

இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில்கூறியதாவது:

சிறப்பாக தொடங்கியிருப்பது முக்கியமானது, எல்லாமே மனநிலையைப் பொறுத்ததுதான். இந்த தொடர் வெற்றியுடன் தொடர்ந்து முன்னேறுவது முக்கியம். ஆடுகளத்தை ஒருமுறை பார்த்தவுடனே நாம் என்ன செய்ய வேண்டும் எனதெரி்ந்துவிடும். பனி விழும் முன்பே பந்து பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக எழும்பி வந்தது.

சிலவிஷயங்களை பேட்டிங்கில் திட்டமிட்டோம், ஆனால் நடக்கவி்ல்லை எனக் கூறவில்லை. நடுவரிசை பேட்டிங்கிலும் முன்னேற்றம் தேவை. ஆனால், கடந்த 2 போட்டிகளாக அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக அஸ்வின், அக்ஸர் படேல் அருமே, சஹல் திரும்பிவந்துள்ளார். வெங்கடேஷுக்கு பந்துவீசும் திறமை இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடைசி வரிசை வரை பேட்ஸ்மேன்களை வைத்திருப்பதை விரும்புகிறேன்.

ஹர்சல் படேல் 8-வது வீரராக வந்தாலும்பேட் செய்கிறார். ஹரியானா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர ஹர்ஸல் படேல் விளையாடியவர். தீபக் சஹர் பேட்டிங்கை இலங்கை தொடரில் பார்த்தோம், அவரும் சிறப்பாக ஆடினார். சஹல் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர்.

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்



[ad_2]

Source link

www.hindutamil.in

ஏஎன்ஐ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here