ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

0
10
ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

முன்னணி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும், மஹிந்திராவின் வெற்றிக்கரமான மாடல்களுள் ஒன்றாக எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரை சொல்லலாம். இருப்பினும் இந்த காருக்கு அப்டேட்கள் வழங்கி நீண்ட வருடங்களாகிவிட்டது.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

இதனால் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரை இந்த ஆகஸ்ட் மாதத்தில் மஹிந்திரா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ்யூவி700 என்கிற பெயரில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய நீளமான எஸ்யூவி கார் அதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர்- அக்டோபரில் பண்டிகை காலத்தில் ஷோரூம்களுக்கு கொண்டுவரப்படலாம்.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

கடந்த ஆண்டு அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று புதிய தலைமுறை தார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் புதிய எக்ஸ்யூவி700 மாடலின் அறிமுக தேதியும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இருக்கலாம்.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

சிறுத்தை மூக்கு வடிவிலான முன்பகுதி மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. க்ரில் பகுதி வழக்கம்போல் கருப்பு நிறத்திலேயே தொடரப்படும். ஆனால் க்ரில்லில் வழங்கப்படும் செங்குத்து ஸ்லாட்கள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கலாம்.

இந்த க்ரில் அமைப்புடன் இணைக்கப்பட உள்ள எல்இடி ஹெட்லேம்ப்களும், டெயில்லைட்களும் தான் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஹெட்லைட்களுக்கு கீழே இரட்டை ஃபாக் விளக்கு அமைப்பை இந்த எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

அத்துடன், காரின் வெளிப்பக்க பெயிண்ட் நிறத்தில் பம்பர் மற்றும் பொனெட் உள்ளிட்டவற்றுடன் எக்ஸ்யூவி700-இன் முன்பக்கம் தற்போதைய எக்ஸ்யூவி500 மாடலை காட்டிலும் அகலமானதாக இருக்கும் எனலாம். இதனால் இயக்கத்தின்போது சாலையில் கம்பீரமான தோற்றம் கிடைக்கும் என்பது உறுதி.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

பக்கவாட்டு பகுதியை பற்றி கூற வேண்டுமென்றால், பின்பக்கத்தை நோக்கி சாய்வாக செல்லும் மேற்கூரையை தாங்கி பிடிக்க பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படும். ஜன்னல் கண்ணாடிகள் காரின் தோற்றத்திற்கு ஏற்ப நன்கு பெரியதாக பொருத்தப்படும்.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

எக்ஸ்யூவி700 தடிமனான பிளாஸ்டிக் க்ளாடிங்குகளை சுற்றிலும் பெற்றுவரவுள்ளது. அலாய் சக்கரங்களின் டிசைனை எப்படியிருந்தாலும் காரின் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு ஏற்றப்படியே மஹிந்திரா நிறுவனம் வழங்க பார்க்கும்.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

இவற்றுடன் பறித்து இழுக்கக்கூடிய வகையிலான கைப்பிடிகளை இந்த மஹிந்திரா எஸ்யூவி வாகனம் பெற்றுவரவுள்ளதை ஏற்கனவே டீசர் படங்களின் மூலமாக உறுதிப்படுத்தி இருந்தனர். முன்பக்கத்தில் இருந்து பக்கவாட்டு பகுதி வழியாக பருமனான தோற்றம் பின்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை இதற்கு முன் வெளியாகி இருந்த ஸ்பை படங்களில் பார்த்திருந்தோம்.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

பெரிய ஜன்னல் கண்ணாடி, மூன்று-அம்பு வடிவிலான டெயில்லைட்கள் மற்றும் மெட்டாலிக்கில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் ப்ளேட் உடன் பம்பர் உள்ளிட்டவை எக்ஸ்யூவி700-இன் பின்பக்கத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றுடன் வாடிக்கையாளர்களை கவர எக்ஸ்யூவி700-இல் பல வசதிகளை பிரிவிலேயே முதல்முறையாக மஹிந்திரா வழங்கவுள்ளது.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

இந்த வகையில் பிரிவில் உள்ள மற்ற எஸ்யூவி வாகனங்களை காட்டிலும் பெரிய அளவிலான சன்ரூஃப்-ஐ எக்ஸ்யூவி700 பெறவுள்ளது. இந்த மேற்கூரைக்கு ஸ்கை ரூஃப் என மஹிந்திரா நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இதனுடன் 99% பாக்ட்ரீயாக்களையும், 95% வைரஸையும் வடிக்கட்டக்கூடிய ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான் இந்த மஹிந்திரா எஸ்யூவி வாகனத்தில் வழங்கப்பட உள்ளது.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

மேலும், இயக்கத்தின்போது ஓட்டுனர் தூங்குவதை அறிந்து கொள்ளும் வசதி, பூஸ்டர் ஹெட்லேம்ப்களும் புதிய எக்ஸ்யூவி700 மாடலில் கொடுக்கப்பட உள்ளன. இதில் பூஸ்டர் ஹெட்லேம்ப்கள் காரின் வேகம் 80kmph வேகத்தை எட்டினால் ஹெட்லைட்டின் ஒளியினை அதிகப்படுத்தும்.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளில் எக்ஸ்யூவி700 விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ஒன்றாக விளங்கவுள்ள 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 197 பிஎச் பவரையும், 2.2 லிட்டர் எம்ஹாவ்க் என்ஜின் 182 பிஎச் பவரையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! டீசர் வீடியோ வெளியீடு

இவை இரண்டுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. அதேநேரம் இந்த எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்கள் அனைத்து-சக்கர ட்ரைவ் தேர்வையும் பெறவுள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here