Saturday, October 1, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

“ஹாஸ்பிட்டல் வார்டுபாய் டு அஜித், விஜய் பட ஸ்டன்ட் மாஸ்டர்!”- தன்னம்பிக்கை பகிரும் ஸ்டன்ட் சில்வா | Stunt master Stunt Silva talks about his career


இப்பவே அமைதியா இருக்குறீங்க.. சின்ன வயசில நீங்க எப்படி இருந்தீங்க..?

“ஹாஸ்டல்ல தங்கியிருந்து படிச்சேன். தனியா இருப்பேன். இருநூறு பேர் இருக்கற ஹாஸ்டல்ல எங்கேயாவது தனியா ஒருத்தன் தெரிஞ்சா அது நானாகத்தான் இருக்கும். யாரோடவும் பேச மாட்டேன். ஒரு தாழ்வு மனப்பான்மையோடுதான் இருப்பேன். சின்ன வயசுல யாராவது என்னை மிரட்டினால்கூட பயந்திடுவேன். தனிமை விரும்பியா இருந்ததால, என்னைச் சுத்தி நடக்கற விஷயங்களை அப்சர்வ் பண்ணிட்டு இருப்பேன். இப்பவும் அப்படித்தான்.

'மாஸ்டர்' ஸ்பாட்டில் ஸ்டன்ட் சில்வா

‘மாஸ்டர்’ ஸ்பாட்டில் ஸ்டன்ட் சில்வா

ரெண்டாவது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன். மார்க்கெட்ல போய் வேலை செய்வேன். ஒரே வேலையில கவனம் செலுத்த மாட்டேன். நிறைய வேலைகள் பார்க்கணும், கத்துக்கணும்னு நினைப்பேன். காலையில ஒரு வேலை, மதியம் ஒரு வேலைன்னு பார்த்திருக்கேன். காலேஜ் படிக்கணும். டாக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, படிக்கலையே! பத்தாவது வரை படிச்சேன். ஐ.டி.ஐ கோர்ஸ் முடிச்சேன். ஆனா, சம்பந்தமே இல்லாம ஆஸ்பிட்டல்ல வார்டு பாய் ஆக வேலை செய்திருக்கேன். அங்கிருந்து அப்சர்வ் பண்ணி, ஸ்டான்லி ஆஸ்பிட்டல் போய், நர்ஸிங் கோர்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். அந்த வேலையில சம்பளம் பத்தலைன்னுதான் சினிமாத் தொழிலுக்கு வந்தேன். நடனமாட முயற்சி பண்ணினேன். அந்த வேலை கிடைக்காததால, சண்டைப் பக்கம் போனேன். 90கள்ல எனக்கு 375 ரூபாய்தான் மாச சம்பளம். அப்ப நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். தினமும் புதுப்புது மனிதர்களைச் சந்திக்கறதால, வாழ்க்கை அழகா போயிட்டு இருக்கு!”

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading