HomeSportsவிளையாட்டு செய்திகள்அஜாஸ் படேல் - வான்கடேவில் வேடிக்கை பார்த்தவர், இன்று அதே மைதானத்தில் வரலாறு படைத்த கதை!...

அஜாஸ் படேல் – வான்கடேவில் வேடிக்கை பார்த்தவர், இன்று அதே மைதானத்தில் வரலாறு படைத்த கதை! | Ajaz Patel an Indian born Newzealand cricketer created history by taking 10 wickets in an innings


இந்த இன்னிங்ஸில் அஜாஸுக்கு சிரமம் அளித்தது மயங்க் அகர்வால் மற்றும் அக்ஸர் படேல் மட்டுமே. மயங்க் அகர்வால் க்ரீஸை விட்டு இறங்கி நேராகவும் with the spin ஆக இன்சைட் அவுட் ஷாட் ஆடியும் அஜாஸை சமாளித்தார். மயங்க் அகர்வால் க்ரீஸை விட்டு இறங்கி வருகிறார் என லென்தை மாற்றி ஷார்ட்டாக வீசாமல் தொடர்ந்து தான் நினைத்த லெந்ன்தில் மட்டுமே வீசினார் அஜாஸ்.

இடதுகை பேட்ஸ்மேனுக்கு எதிராக இடதுகை பௌலர் என்பது எப்போதுமே சிக்கலான வேலைதான். 100 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு அக்ஸர் படேல் சிரமப்படுத்தினாலும் கடைசியாக இந்த யுத்தத்தில் வென்றது என்னவோ அஜாஸ்தான். Back Foot இல் க்ரீஸுக்குள் நின்று ஆடியவரை லைனை மாற்றி Front Foot க்கு வரை வைத்து lbw ஆக்கினார். இடதுகை பேட்ஸ்மேனான அக்ஸருக்காக மட்டுமே அஜாஸ் தனது லைன் & லென்த்தில் கொஞ்சமேனும் சமரசம் செய்திருந்தார். அதற்கான ரிசல்ட்டையும் பெற்றார்.

நேற்றைய நாள் முடிவில் இந்திய அணி 221-4 என்ற நிலையில் இருந்தது. அந்த 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல்தான் வீழ்த்தியிருந்தார். நேற்றைய நாள் முடிந்த பிறகு வான்கடே மைதானத்தின் ஹானர்ஸ் போர்டை பெருங்கனவோடு அஜாஸ் படேல் பார்த்துக் கொண்டிருப்பது போல நியூசிலாந்து அணி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

ஆனால், இப்போதுதான் முதல் முறையாக ஒரு அணிக்காக அதிகாரப்பூர்வமாக வான்கடேவில் ஒரு போட்டியில் ஆடுகிறார். 5 விக்கெட்டுகளை எடுத்து வான்கடேவின் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்து சொந்த மண்ணில் தனது பெயரை பதிக்க வேண்டும் என நினைத்தவர், யாரும் எதிர்பாரா வகையில் 10 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்றிலேயே தனது பெயரை பதித்துவிட்டார்!

வாழ்த்துகள் அஜாஸ் படேல்!



Source link

sports.vikatan.com

உ.ஸ்ரீ

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read