Home Sports விளையாட்டு செய்திகள் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம்: ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம்: ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை

0
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம்: ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை

[ad_1]

தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
 
இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
 
image
2-வது நாளான இன்று ஸ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். இப்போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல் களத்தில் உள்ளனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

[ad_2]

Source link

puthiyathalaimurai.com

Web Team

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here