Home Sports விளையாட்டு செய்திகள் இதற்குமுன் இப்படி மோசமாக ஆடி பார்க்கவில்லை: இந்திய அணி குறித்து கங்குலி மனம் திறப்பு | Sourav Ganguly Says India’s T20 World Cup Performance Poorest In Recent Times

இதற்குமுன் இப்படி மோசமாக ஆடி பார்க்கவில்லை: இந்திய அணி குறித்து கங்குலி மனம் திறப்பு | Sourav Ganguly Says India’s T20 World Cup Performance Poorest In Recent Times

0
இதற்குமுன் இப்படி மோசமாக ஆடி பார்க்கவில்லை: இந்திய அணி குறித்து கங்குலி மனம் திறப்பு | Sourav Ganguly Says India’s T20 World Cup Performance Poorest In Recent Times

[ad_1]


கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்திய அணியின் டி20 போட்டிகளில் மோசமாகச் செயல்பட்டது டி20 உலகக் கோப்பையில்தான். இதற்குமுன் இப்படி மோசமாக விளையாடி பார்த்ததில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முதல்முறையாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பைப்போட்டியில் இந்திய அணி சூப்பர்12 சுற்றோடு ெவளியேறியது. உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்காமல் இருந்த இந்திய அணி முதல்முறையாக பாகிஸ்தானிடம் தோற்றது, நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. கத்துக்குட்டி அணிகளாக நமிபியா,ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தானை மட்டுமே இந்திய அணி வென்றது.

விராட் கோலிதலைமையில் சென்ற இந்திய அணி பிற அணிகளின் ரன்ரேட்டையும், பிற அணிகளின் வெற்றி, தோல்வியை வைத்து அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை தேடிக்கொண்டிருந்த அவலநிலையில்இருந்தது. ஆனால் ஏதும் நடக்கவி்ல்லை

டி20 உலகக் கோப்பைப்போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு பல்வேறு தரப்பிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என இந்தியஅணியின் செயல்பாட்டை சமூக வலைத்தளங்களில் காட்டமாக விமர்சித்தனர். ஆனால், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மட்டும் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவி்க்கவி்ல்லை

இந்நிலையில் தனியார் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேட்டி அளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேர்மையாகக் கூறினால், கடந்த 2017, 2019ம் ஆண்டுகளில் அதாவது சாம்பியன்ஸ் டிராபி, இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாகத்தான் செயல்பட்டது. சாம்பியன்ஸ் டிராபியில் பைனலில் பாகிஸ்தானிடம் ஓவல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் தோற்றோம். 2019ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைப்போட்டியில் அனைத்து அணிகளையும் தோற்கடித்து அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்றோம் 2 மாதங்களாக உழைத்தது வீணாகிப்போனது.

ஆனால், டி20 உலகக் கோப்பைப்போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. நான் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பார்த்தவரையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடியதுதான் மோசமானது என நினைக்கிறேன்.

என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், போதுமான சுதந்திரத்துடன் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடவில்லை என நான் நினைக்கிறேன். சில நேரங்களில் பெரியபோட்டித் தொடரில்இதுபோன்று நடக்கலாம். நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடந்த ஆட்டங்களில் இந்த சூழலைப் பார்த்தேன். இந்திய அணியினர் அவர்களின் திறமையில் 15 சதவீதத்தை மட்டுமே வெளிப்படுத்தி விளையாடினர். இதனால்தான் இப்படி நடந்தது என்று சில நேரங்களில் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி சொல்லிவிட முடியாது

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.



[ad_2]

Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here