Home தமிழ் News ஆட்டோமொபைல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்… முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்… முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

0
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்… முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

[ad_1]

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

இந்தியாவில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் க்ரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12,463 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 12,651 என சற்றே உயர்ந்துள்ளது. இது 1.5 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் நைட் எடிசனை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கு இந்த நைட் எடிசன் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 8,086 ஆக இருந்த கியா செல்டோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 7,506 ஆக குறைந்துள்ளது. இது 7.1 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் புதுவரவான எக்ஸ்யூவி700 கார் 3வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் மஹிந்திரா நிறுவனம் 4,494 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரானது கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட முடியாது. இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ் கார் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,247 எஸ்-க்ராஸ் கார்களை விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 2,922 ஆக உயர்ந்துள்ளது. இது 30 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு 5வது இடம் கிடைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வரும் நிலையில், அதன் விற்பனை சரிவடைந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3,577 ஆக இருந்த ஸ்கார்பியோவின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 2,712 ஆக குறைந்துள்ளது. இது 24.1 சதவீத வீழ்ச்சியாகும். மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்த புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக அந்த நிறுவனம் செய்யவுள்ள மிகப்பெரிய அறிமுகமாக புதிய தலைமுறை ஸ்கார்பியோ கருதப்படுகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

நடப்பாண்டிலேயே புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் 6வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2,631 டைகுன் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் ஹூண்டாய் அல்கஸார் கார் 7வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 2,422 அல்கஸார் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருப்பது ஸ்கோடா குஷாக் ஆகும். ஸ்கோடா நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 2,413 குஷாக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய 3 கார்களுமே புதுவரவுகள் ஆகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

இந்த 3 கார்களுமே கடந்தாண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில் இல்லை. எனவே அவற்றின் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா சஃபாரி 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,514 சஃபாரி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 2,071 ஆக உயர்ந்துள்ளது. இது 37 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலிலேயே விற்பனையில் அதிக வளர்ச்சியை பதிவு செய்திருப்பது டாடா சஃபாரிதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த பட்டியலில் எம்ஜி ஹெக்டர் 10வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,147 ஹெக்டர் கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 1,448 ஆக குறைந்துள்ளது. இது 33 சதவீத வீழ்ச்சியாகும். பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இன்னும் பல்வேறு நிறுவனங்கள் இந்த செக்மெண்ட்டில் புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here