HomeSportsவிளையாட்டு செய்திகள்இந்திய அணிக்காக விளையாடும்போது துருப்புச்சீட்டாக இருப்பார் வருண் சக்ரவர்த்தி: விராட் கோலி புகழாரம் | IPL...

இந்திய அணிக்காக விளையாடும்போது துருப்புச்சீட்டாக இருப்பார் வருண் சக்ரவர்த்தி: விராட் கோலி புகழாரம் | IPL 2021: Kohli lauds Chakaravarthy, says hes going to be a key factor when he plays for India



இந்திய அணி்க்காக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும்போது முக்கியத் துருப்புச் சீட்டாக வருண் சக்ரவர்த்தி இருப்பார் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டினார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான்.

அதிலும் வருண் சக்கரவர்த்தி, ரஸலின் பந்துவீச்சு ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையை உருக்குலைத்தது. 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், 15 டாட்பந்துகளையும்வீசிய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


இந்த போட்டி முடிந்தபின், ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

வருண் சக்ரவரத்தியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. நான் இந்த நேரத்தில் குறிப்பிடுவது என்னவென்றால், இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வருண் ஆடும்போது, முக்கியத் துருப்புச்சீட்டாகஇருப்பார்.

அனைத்து இளைஞர்களிடம் இருபோன்ற திறமையான ஆட்டத்தை நாங்கள் பார்ப்பது அவசியமாகிறது. இந்திய அணியின் காத்திருப்பில் உள்ள வீரர்களின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர் போன்ற திறமையான வீரர் எதிர்காலத்தில் இந்திய அணியில் விளையாடுவது சிறந்த அறிகுறி.

இந்த ஆடுகளத்தில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்துவிளையாடுவது முக்கியம். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஏராளமான பனிப்பொழிவு இருக்கும் என நினைக்கவில்லை, நாங்கள் கணிக்கவும் இல்லை. ஆடுகளம் நன்றாகஇருந்ததால்தான், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தேன்.

ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்திருந்த நாங்கள், அடுத்த20 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து கொலாப்ஸ் ஆகிவிட்டோம். இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டுவருவது கடினமாகிவிட்டது. எங்களுக்கு சிறிய உருக்குலைவு என்றாலும், எங்களை விழிப்படையவைத்து, 2வது சுற்றை சிறப்பாக செய்ய உதவும்.

தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் காலத்துக்கு ஏற்ப கிரிக்கெட்டில் தங்களை நெகிழ்வுள்ளவர்களாக மாற்ற வேண்டும். தற்போது 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் உள்ளோம்.இந்தத் தொடரில் தோல்விகளை ஏதாவது ஒரு போட்டியில் இருக்கத்தான் செய்யும். ஆனால், எவ்வாறு திட்டமிடுகிறோம், திட்டமிடலை எவ்வாறு செயல்படுத்துகிறோம், வெற்றி பெறுகிறோம் என்பதில் இருக்கிறது. எங்கள் அணி மீது நம்பிக்கை இருக்கிறது, அடுத்தப் போட்டியில் நிச்சயம் சிறப்பாகச்செயல்பட்டு வலிமையான மீண்டெளுவோம்

இவ்வாறு கோலி தெரிவித்தார்.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read