Home Sports விளையாட்டு செய்திகள் “இந்திய வீரர்கள் ஆதரவளித்தால் நன்றாக இருக்கும்!”- LGBTQ+ கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மனிஷ் மோடி | Exclusive interview with world’s first LGBTQ cricket team captain Manish Modi

“இந்திய வீரர்கள் ஆதரவளித்தால் நன்றாக இருக்கும்!”- LGBTQ+ கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மனிஷ் மோடி | Exclusive interview with world’s first LGBTQ cricket team captain Manish Modi

0
“இந்திய வீரர்கள் ஆதரவளித்தால் நன்றாக இருக்கும்!”- LGBTQ+ கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மனிஷ் மோடி | Exclusive interview with world’s first LGBTQ cricket team captain Manish Modi

[ad_1]

கிரேசஸ் கிரிக்கெட் கிளப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியவந்தது?

“2007-ல் எனக்கு கிரஹம் என்ற காதலன் இருந்தார். அவருக்கு கிரிக்கெட்டில் எந்த ஈடுபாடும் இல்லை. சமூகவலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த கிளப்பினை பற்றி அவர் அறிந்திருந்தார். எனக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தைப் பற்றித் தெரிந்ததும் நான் கிரேசஸ் கிரிக்கெட் கிளப்பில் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எனக்கு அவர்தான் பரிந்துரை செய்தார். ஒரு LGBTQ+ அணிக்காக விளையாடுவது வீட்டில் தெரியவந்தால் என்னவாகும் என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் அந்த பயத்தை உடைத்து, நமக்கு ஒரு வாழ்க்கைதான், அதில் நான் நானாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அங்கு சேர்ந்தேன். என்னை ஆசையாக வரவேற்றுக் கொண்டது அந்த கிளப்.”

நீங்கள் தன்பால் ஈர்ப்பாளர் என்று பெற்றோர்களிடம் எப்படிச் சொன்னீர்கள்? அந்தத் தருணம் எப்படி இருந்தது?

“நான் வீட்டில் அப்பாவிடம்தான் முதன்முதலில் சொன்னேன். அது ஒரு மிகப் பதற்றமான தருணம். அப்பா லண்டன் வந்து இருந்தபோது முதல் முறை அவருடன் மது அருந்தினேன். இதைப்பற்றிச் சொல்வதற்கு அதுவே சரியான தருணம் என்று தோன்றியது. அதற்காக என்னை ஒரு வாரமாய் தயார்படுத்திக்கொண்டுதான் வந்தேன். நான் தன்பால் ஈர்ப்பாளர் என்று சொல்வது மட்டுமல்லாமல், அவர் எனக்கு எப்படிப்பட்ட தந்தை என்பதையும் அவர்தான் எனக்கு ஹீரோ என்பதையும் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் இந்தியாவில் எப்போதும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே பெரிய இடைவெளி இருக்கும். பெற்றோரிடம் மனம் திறந்து பேசக்கூடமுடியாது. மேலும், நான் தன்பால் ஈர்ப்பாளர் என்பதால் மீண்டும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளமுடியாது என்றும் கூறினேன். அப்பா, என்னைப் புரிந்துகொண்டு, ‘இது உன் வாழ்க்கை. என்ன நடந்தாலும் எப்போதும் நீ என் மகன்தான். எனக்குத் தரவேண்டிய மரியாதையை நீ தந்தால் போதும்’ என்றார்.”

[ad_2]

Source link

sports.vikatan.com

இரா. மா. அடலேறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here