Home Sports விளையாட்டு செய்திகள் இறுதி ஓவரில் மிரட்டிய கார்த்திக் தியாகி! பஞ்சாப் அணியை 2 ரன்களில் வென்றது ராஜஸ்தான்!

இறுதி ஓவரில் மிரட்டிய கார்த்திக் தியாகி! பஞ்சாப் அணியை 2 ரன்களில் வென்றது ராஜஸ்தான்!

0
இறுதி ஓவரில் மிரட்டிய கார்த்திக் தியாகி! பஞ்சாப் அணியை 2 ரன்களில் வென்றது ராஜஸ்தான்!

[ad_1]

நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுலும், ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சனும் கேப்டனாக அணியை வழிநடத்தினர். 

image

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராகுல், “நாங்கள் சேஸ் செய்ய விரும்புகிறோம். கடந்த 2020 சீசனில் அமீரக மைதானத்தில் நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம்” என சொல்லி இருந்தார். அதோடு ராஜஸ்தானை முதலில் பேட் செய்ய அவர் பணித்தார். 

image

எவின் லூயிஸ் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 

ராஜஸ்தான் அணிக்காக எவின் லூயிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தனர். லூயிஸ் 21 பந்துகளில் 36 ரன்களை எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களில் வெளியேறினார். 

லிவிங்க்ஸ்டன் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வால்!

பின்னர் களம் இறங்கிய லிவிங்க்ஸ்டன் உடன் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஜெய்ஸ்வால். லிவிங்க்ஸ்டன் 25 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 49 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மொத்தம் 36 பந்துகளை சந்தித்திருந்தார் அவர். அதில் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களையும் பறக்க விட்டிருந்தார். 

image

அதிரடி ஆட்டம் ஆடிய மஹிபால் லோம்ரோர்!

21 வயதான இளம் வீரர் மஹிபால் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 43 ரன்களை குவித்து அவுட்டானார். அதில் 2 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இந்த ஆட்டத்தில் கெயில் விளையாடவில்லை என்றாலும் அவர் இல்லாத குறையை தனது சிக்ஸர்கள் மூலம் போக்கி இருந்தார் மஹிபால். 

பின்வரிசையில் வந்த ரியான் பராக், ராகுல் தெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் என மூன்று வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். 

image

ஐந்து விக்கெட்டுகளை அள்ளிய ஹர்ப்ரீத் பிரார்!

பஞ்சாப் அணியின் பவுலர் ஹர்ப்ரீத் பிரார் இந்த ஆட்டத்தில் மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை அள்ளியிருந்தார். நான்கு ஓவர்களில் 32 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார் அவர். அதில் மொத்தம் 11 டாட் பால்கள். இதற்கு முந்தைய சீசனில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் இந்த சீசனில் மூன்றாவது முறையாக அணியில் இடம் பெற்று விளையாடி உள்ளார். 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் 185 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி பவுலர்கள் இறுதி ஓவர்களில் சிறப்பாகவே ராஜஸ்தான் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருந்தனர். 

image

கே.எல்.ராகுல் – மயங்க் அகர்வால்!

பஞ்சாப் அணிக்காக கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் ஐபிஎல் அரங்கில் கூட்டு சேர்ந்து எதிரணியினரின் பந்துவீச்சை போட்டு தாக்குவதில் வல்லவர்கள். வழக்கம் போல இந்த ஆட்டத்திலும் முதல் விக்கெட்டிற்கு 120 ரன்களை சேர்த்திருந்தனர். அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகவும் நிதானமாக விளையாடி அசத்திய கே.எல். ராகுல், இந்த ஆட்டத்தில் 33 பந்துகளில் 49 ரன்களை குவித்திருந்தார். 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 

image

இன்னிங்ஸை நிதானமாக தொடங்கி அதிரடியாக ஆடிய மயங்க்!

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், இன்னிங்ஸை மிகவும் நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடி ஆட்டம் ஆடினார். பவர் பிளேயில் 33-வது பந்தில் தான் முதல் பவுண்டரி அடித்தார். அதன் பிறகு அவரது அதிரடி ஆட்டத்தை ராஜஸ்தான் வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 15 பந்துகளுக்கு 9 ரன்களை எடுத்திருந்த மயங்க், அதற்கடுத்த 28 பந்துகளில் 58 ரன்களை அதிரடியாக குவித்தார். மொத்தம் 43 பந்துகளில் 67 ரன்களை அவர் குவித்திருந்தார். அவர் அவுட்டாகும் போது அணியின் ஸ்கோர் 126. அணியின் வெற்றிக்கு 7 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டது. 

மார்க்ரம் மற்றும் பூரன் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்களை விரைந்து ஸ்கோர் செய்ய முனைந்தனர். இருவரும் இணைந்து 57 ரன்களை சேர்த்திருந்தனர்.  

image

திருப்புமுனை ஏற்படுத்திய கடைசி ஓவர்! 

இரண்டாவது இன்னிங்ஸின் முதல் 19 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணியால் கடைசி ஓவரில் அந்த ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. இறுதி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டது. கார்த்திக் தியாகி அந்த ஓவரை வீசி இருந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை மார்க்ரம் எதிர்கொண்டார். அது டாட் பாலாக அமைந்தது. இரண்டாவது பந்தில் சிங்கிள் தட்டினார். மூன்றாவது பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த பூரன் 32 ரன்களில் அவுட்டானார். நான்காவது பந்தை ஹூடா எதிர்கொண்டார். அந்த பந்தும் டாட்.  ஐந்தாவது பந்தில் ஹூடாவை அவுட் செய்தார் கார்த்திக் தியாகி. கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அதை ஆலன் எதிர்கொண்டார். அந்த பந்தும் டாட். அதன் மூலம் ராஜஸ்தான் அணி வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. கிட்டத்தட்ட உறுதியான பஞ்சாப் அணியின் வெற்றியை தனது அபார பந்துவீச்சின் மூலம் தட்டிப்பறித்தார் கார்த்திக் தியாகி.  

இதையும் படிக்கலாம் : ‘கேப்டன்சி பதவி’ கோலி தானாக முடிவு எடுக்கிறாரா.. சூழலின் அழுத்தம் காரணமா?- என்ன நடக்கிறது? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here