Home Sports விளையாட்டு செய்திகள் ‘ஈகோவை ஒழித்தால் உச்சத்தை அடையலாம்’ – மில்கா சிங் சிறப்புப் பகிர்வு | flying sikh athlete milkha singh who enters into nation as refugee turned hero

‘ஈகோவை ஒழித்தால் உச்சத்தை அடையலாம்’ – மில்கா சிங் சிறப்புப் பகிர்வு | flying sikh athlete milkha singh who enters into nation as refugee turned hero

0
‘ஈகோவை ஒழித்தால் உச்சத்தை அடையலாம்’ – மில்கா சிங் சிறப்புப் பகிர்வு | flying sikh athlete milkha singh who enters into nation as refugee turned hero

‘உச்சத்தை அடைவதற்கு நீ விரும்பினால், உன்னுடைய ஒட்டுமொத்த இருப்பையும் அழித்துவிடு. ஏனெனில், விதை ஒன்று முளைவிட்டு மலராவதற்கு மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறது.’ மில்கா சிங்

காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகள் என இரண்டிலும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தடகள வீரர். 1960 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தை வெறும் 45.73 நொடிகளில் கடந்து தேசிய சாதனையை படைத்தவர். அது சுமார் 40 ஆண்டு காலம் வரை தகர்க்கப்படாத சாதனையாக இருந்தது. இந்திய நாட்டுக்குள் அகதியாக வந்தவர் பின்னாளில் தேசத்தின் தடகள சாம்பியனானார். அவர் தான் மில்கா சிங். பறக்கும் சீக்கியர் எனப் போற்றப்படுகிறார்.

தனது வாழ்வில் தான் சந்தித்த கஷ்டங்களை ‘ஓடி ஓடி…’ எதிர்நீச்சல் போட்டு வென்றவர் மில்கா. அது அவரது பால்ய காலத்தில் தொடங்கியது. பள்ளி செல்வதற்காகவும், மீண்டும் வீடு திரும்பவும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடியவர் மில்கா. அவரது சாதனை கதையை அறிந்து கொள்வோம்.

யார் இந்த மில்கா சிங்? கடந்த 1929 வாக்கில் ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் முஸாஃபர்கார் மாவட்டத்தில் அமைந்துள்ள கோவிந்தபுரா கிராமத்தில் பிறந்தவர் மில்கா. இப்போது அது பாகிஸ்தானில் உள்ளது. பாரம்பரிய மிக்க சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர். வழக்கமான பிள்ளைகளை போல அவரது பால்ய காலம் அமையவில்லை. வாட்டி வதைத்த வறுமை, கலவரத்தில் பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் உற்றாரை இழந்தார். பிரிவினைவாத்தின் போது இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்தவர்.

இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்வதற்கு முன்னர் சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தில் பணியாற்றியவர். ராணுவ பயிற்சியின் போது தான் தனக்குள் இருக்கும் விளையாட்டு திறனை அறிந்து கொண்டுள்ளார். ஒருவகையில் ராணுவம் தான் அதை அவருக்கு அறிமுகம் செய்துள்ளது என்றும் சொல்லலாம்.

ஓட்ட களத்தில் மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொண்டார். அதற்கான பலனையும் அறுவடை செய்தார். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். அதன் மூலம் லைம் லைட்டுக்கு வந்தார். கட்டாக நகரில் நடைபெற்ற 1958 தேசிய விளையாட்டு போட்டியில் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்தார்.

அதே ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 200 மற்றும் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார். மேலும், காமன்வெல்த்தில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார். சுதந்திர இந்தியாவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அப்போது படைத்தார். அவருக்கு ‘பறக்கும் சீக்கியர்’ என பட்டம் கொடுத்தவர் பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது அதிபர் அயூப் கான்.

தவறவிட்ட ஒலிம்பிக் பதக்கம்! : 1960 ரோம் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் படிப்படியாக முன்னேறி இறுதி வரை சென்றிருந்தார் மில்கா. மொத்தம் ஆறு வீரர்கள் இறுதிக்கு முன்னேறி இருந்தனர். பதக்கத்திற்கான அந்த பந்தயத்தில் முதல் 250 மீட்டர் தூரம் வரை முதல் நிலையில் இருந்தார் மில்கா. வெறும் 150 மீட்டர் தூரத்தை கடந்தால் பதக்கம் உறுதியாகும் என்ற நிலை. ஆனால் அந்த நேரத்தில் அவர் பின்தங்கிய காரணத்தால் 45.73 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து, நான்காம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். களத்தில் தனது மோசமான நினைவு அது என பின்னாளில் அவரே சொல்லி இருந்தார்.

தொடர்ந்து 1962 ஆசிய போட்டியில் 400 மீட்டர் தனிநபர் மற்றும் ரிலே ரேஸில் தங்கம் வென்றார். 1964 கொல்கத்தா நகரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றார்.

மில்கா சிங்கின் பிற்காலம்! – 1963-ல் பதன்கோட்டில் இந்திய வாலிபால் அணியின் முன்னாள் கேப்டன் நிர்மல் கவுரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். அவர் வென்ற பதக்கங்களில் டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இப்போது அது பாட்டியாலாவில் உள்ள விளையாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது.

1960 ஒலிம்பிக் இறுதியின் 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் அணிந்திருந்த ஷூவை தொண்டு நிறுவனத்தின் நலனுக்காக 2021 வாக்கில் ஏலம் விடப்பட்டது. அவருக்கு மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 2013 வாக்கில் அவரது வாழ்க்கை கதை திரைப்படமாக எடுக்கப்பட்டது. கடந்த 2021, ஜூன் 18-ம் தேதி அன்று அவர் உயிரிழந்தார். பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.

விளையாட்டு களத்தில் அவர் என்றென்றும் இன்ஸ்பிரேஷன் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here