Home தமிழ் News ஆட்டோமொபைல் எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

0
எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

[ad_1]

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

இந்த 194 நாடுகளுடன் வரும் ஆண்டுகளில் இந்தியாவும் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் பேசிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஇஓ-வும், நிர்வாக இயக்குனருமான கெனிச்சி அயுகாவா, ஜிம்னியை காட்சிப்படுத்தி பேசுகையில், இதன் அறிமுகத்திற்கு இந்தியாவில் கிடைக்கும் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் மதிப்பீடு செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

முழுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்திய சந்தைக்கென உருவாக்கப்படும் இந்த ஆஃப்-ரோடு வாகனத்திற்கு விற்பனையில் போட்டியளிக்கக்கூடிய வகையில் தற்சமயம் மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்கள் உள்ளன. இவை இரண்டிற்கும் இடையேயான பலத்த போட்டிக்கு மத்தியில் விரைவில் இணையவுள்ள இந்த புதிய போட்டியாளரிடம் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

தோற்றம் & பரிமாணங்கள்

ஜிம்னியின் மிக முக்கியமான அடையாளமே அதன் பெட்டகம் வடிவம் தான். ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னியின் முன்பக்கம் மிகவும் முரட்டுத்தனமானதாக பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் அமரும் வகையில் காம்பெக்ட்டாக வடிவமைக்கப்படுகின்ற ஜிம்னியில் ஆற்றல்மிக்க என்ஜின் வழங்கப்பட உள்ளதால், இந்த எஸ்யூவி வாகனத்தினை சவாலான பாதைகள் மட்டுமின்றி, நீண்ட பயணமாக நெடுஞ்சாலைகளிலும் தாராளமாக எடுத்து செல்லலாம்.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

16-இன்ச் அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் ஜிம்னியில் வழங்கப்பட உள்ளன. ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னியின் உயரம் 3850மிமீ ஆகவும், அகலம் 1645மிமீ ஆகவும், உயரம் 1730மிமீ ஆகவும் இருந்தன. வீல்பேஸ் 2550மிமீ நீளத்தில் இருந்தது. இது 3-கதவு ஜிம்னியின் வீல்பேஸ் ஆகும். 5-கதவு சுஸுகி ஜிம்னி இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு இன்னும் சில வருடங்களாகலாம்.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

3-கதவு ஜிம்னி பின்பக்கத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பொருட்களை வைப்பதற்கு பெரிய இடவசதியினை கொண்டில்லாததால், இது நகர்புற பயன்பாட்டிற்கே ஏற்றதாக விளங்குகிறது. ஜிம்னி இந்தியாவில் பல முறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த சமயங்களில் வாகனம் முழுவதும் மறைக்கப்பட்டு நிலையில் இருந்ததால், ஜிம்னியின் தோற்றத்தை பற்றிய முழுமையான விபரங்கள் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின்போதே வெளியாகும் என தெரிகிறது.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

வசதிகள்

ஜிம்னியின் உட்புறத்தில் இணைப்பு தொழிற்நுட்பத்துடன் ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் டேஸ்போர்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கான ஜிம்னியின் உட்புற கேபின் இதுவரையில் எந்தவொரு ஸ்பை படத்திலும் வெளிக்காட்டப்படவில்லை. இருப்பினும் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் கேபினை கிட்டத்தட்ட விரைவில் அறிமுகமாகவுள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா/ எஸ்-கிராஸ் கார்களின் உள்கட்டமைப்பில் எதிர்பார்க்கிறோம்.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

ஆனால் வசதிகளை பொறுத்தவரையில் அப்டேட் செய்யப்பட்ட புதிய விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-க்ராஸ் உடன் ஒப்பிடுகையில் ஜிம்னி சில வசதிகளை இழக்கலாம். இருப்பினும் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி & இஎஸ்சி போன்ற பாதுகாப்பு அம்சங்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அதேநேரம் கூடுதல் காற்றுப்பைகள் மற்றும் மோதல் எச்சரிக்கை தொழிற்நுட்பங்கள் போன்றவற்றையும் ஜிம்னியின் டாப் வேரியண்ட்களில் எதிர்பார்க்கிறோம்.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

என்ஜின் தேர்வுகள்

ஜிம்னி ஆஃப்-ரோடு வாகனத்தில் சுஸுகியின் வழக்கமான 1.5 லிட்டர் கே15பி என்ஜின் பொருத்தப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதிகப்பட்சமாக 102 பிஎச்பி & 130 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & 4-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படலாம்.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய இந்த ஆற்றல் அளவுகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. டார்க் திறன் மட்டும் சற்று அதிகமாக வழங்கப்படலாம். ஆஃப்-ரோடு வாகனம் என்பதால், 4-சக்கர ட்ரைவ் தேர்வினை ஜிம்னியில் எதிர்பார்க்கலாம். இந்த என்ஜின் அமைப்பில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் வழங்கப்படலாம்.

எந்தெந்த விஷயங்களில் மாருதி ஜிம்னி எஸ்யூவி ஸ்பெஷலானது? முக்கிய சிறப்பம்சங்கள்!!

விலை & அறிமுக தேதி

ஏற்கனவே கூறியதுதான், முதலாவதாக நம் இந்தியாவில் 3-கதவு ஜிம்னி தான் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதன் அறிமுகம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் தற்போது வரையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிவிக்கவில்லை. ஜிம்னியின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here