Home தமிழ் News ஆட்டோமொபைல் என்னங்க சொல்றீங்க… ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

என்னங்க சொல்றீங்க… ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

0
என்னங்க சொல்றீங்க… ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

[ad_1]

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் இந்திய சந்தையில் வலுவாக கால்பதிக்க கடந்த சில வருடங்களாக மிகவும் போராடி வருகிறது. இதனாலேயே ஐரோப்பாவில் மிக பிரபலமாக இருக்கும் தனது சி5 ஏர்க்ராஸ் நடுத்தர-அளவு எஸ்யூவி காரினை இந்த நிறுவனம் தனது முதல் இந்திய காராக களமிறக்கியது. ஆனால் கிடைத்த பலனோ வேறு.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

ஐரோப்பிய சந்தை வேறு, நமது இந்திய சந்தை வேறு என்பதை ஆரம்பத்தில் சிட்ரோன் நிறுவனம் முழுமையாக அறிந்திருக்கவில்லை போலும். அல்லது தன்னை ஒரு பிரீமியம் தர கார்கள் தயாரிப்பு நிறுவனமாக இந்திய மக்கள் முன் காண்பிக்க சிட்ரோன் நினைத்திருக்கலாம். ஏனெனில் முதல் மாடலே பெரும்பாலான மக்கள் மனதில் வலுவாக பதியும்.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

அந்த அளவிற்கு, சி5 ஏர்க்ராஸ் உயர் தரத்திலான உட்புற கேபின் மற்றும் அளவில் சற்று பெரிய உடலமைப்பை கொண்டதாக உள்ளது. அதுமட்டுமின்றி நேரடியாக வெளிநாட்டில் முழுவதுமாக தயாரித்து இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால், சி5 ஏர்க்ராஸின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.33 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த அதிகப்படியான விலை சிட்ரோனின் விற்பனையில் தெளிவாக எதிரொலித்தது.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

ஆனால் இம்முறை சூதாரித்து கொண்ட சிட்ரோன் இந்திய சந்தைக்காகவே அளவில்-சிறிய காம்பெக்ட் எஸ்யூவி காரை சி3 என்கிற பெயரில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மேலும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதனாலேயே ரூ.6 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் சி3 மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தற்போது வெளியாகியுள்ளன.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

Source: Rushlane

ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இதுதொடர்பான படத்தில் ரூ.6 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் சிட்ரோன் சி3-இன் லைஃப் வேரியண்ட் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சி3 காரின் இந்த ஆரம்ப-நிலை வேரியண்ட்டின் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.6.25 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

இந்திய சந்தையில் லைவ் மற்றும் லைஃப் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் சிட்ரோன் சி3 காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட உள்ளது ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயமே. ஃபீல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7 லட்சத்தில் துவங்கி ரூ.8.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட உள்ளதாக இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

ஃபீல் வேரியண்ட் ஆனது ஸ்டாண்டர்ட், வைப் தொகுப்பு, இரட்டை-நிறம், இரட்டை-நிறம் வைப் தொகுப்பு, டர்போ இரட்டை-நிறம் வைப் தொகுப்பு என மொத்தம் 5 விதமான ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம். இவை அனைத்தும் இணையத்தில் கசிந்துள்ள விபரங்கள் தானே தவிர்த்து இதில் எந்த அளவில் உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆதலால் சிட்ரோன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் காத்திருப்பது நல்லது.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

இந்தியாவில் சி3 காம்பெக்ட் எஸ்யூவி கார் வருகிற ஜூலை 20ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் அதே தினத்தில்தான் சி3 காருக்கான அதிகாரப்பூர்வ எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆனால் சி3 காரில் வழங்கப்பட உள்ள தொழிற்நுட்ப அம்சங்கள் குறித்த விபரங்களை ஏற்கனவே சிட்ரோன் வெளியீடு செய்துவிட்டது.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

இதன்படி பார்க்கும்போது, ஆரம்ப நிலை லைவ் வேரியண்ட்டில் மேனுவல் ஏசி, மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன்பக்க பவர் ஜன்னல் கண்ணாடிகள், இரட்டை காற்றுப்பைகள், ரிவர்ஸில் வருவதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள், 12 வோல்ட் சாக்கெட் மற்றும் 100% முற்றிலுமாக மடக்கக்கூடிய பின் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.

என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!

இந்த சிட்ரோன் காம்பெக்ட் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் & 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 85 பிஎஸ் & 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும், டர்போ என்ஜின் 110 பிஎஸ் & 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here