HomeSportsவிளையாட்டு செய்திகள்ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவ.19-ல் தொடக்கம் | Indian Super League

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவ.19-ல் தொடக்கம் | Indian Super League


செய்திப்பிரிவு

Published : 16 Sep 2021 03:11 am

Updated : 16 Sep 2021 05:15 am

 

Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 05:15 AM

indian-super-league

மும்பை

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரும்நவம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான்கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 8-வது சீசன் போட்டிகள் வரும் நவம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம்(எஃப்எஸ்டிஎல்) வெளியிட்டுள்ளது. கடந்த முறை போன்றே இம்முறையும் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 115 போட்டிகள் நடைபெற உள்ளன. நவம்பர் 19-ம் தேதி தொடங்கும் முதற்கட்ட போட்டிகள் ஜனவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான்கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன. இம்முறை சனிக்கிழமை இருஆட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் 2-வது ஆட்டம் இரவு 9.30மணிக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் வழக்கம் போல் இரவு 7.30 மணிக்குபோட்டி தொடங்கும். நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி எஃப்சி தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 22-ம் தேதி எஃப்சி கோவா அணியை எதிர்கொள்கிறது. சென்னையின் எஃப்சி முதல் ஆட்டத்தில் நவம்பர் 23-ம் தேதி ஹைதராபாத்துடன் மோதுகிறது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read