Home தமிழ் News ஆட்டோமொபைல் ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்… அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்… அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

0
ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்… அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

[ad_1]

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), மின் வாகன உற்பத்தியில் சற்றே தீவிரமாக ஈடுபட தொடங்கியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே பல புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

இந்த நிலையில் தனது தீவிரமான மின் வாகன உற்பத்தி செயல்பாட்டை வெளிக்காட்டும் வகையில் புதிய மற்றும் அதி நவீன எலெக்ட்ரிக் வாகன உருவாக்கத்தில் பென்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் (Vision EQXX) எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

இது ஓர் கான்செப்ட் மாடலாகும். இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஓராயிரம் கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய மிக அதிக சிறப்பு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரே தற்போது லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சிஇஎஸ் 2022 (CES 2022)-இல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

உலகின் மிகவும் செல்வாக்கு மிகுந்த தொழில்நுட்ப நிகழ்வுகளில்சிஇஎஸ்-வும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் கார் உச்சபட்ச ரேஞ்ஜை வழங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதன் அட்டகாசமான ஏரோடைனமிக் தோற்றமாகும்.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

அதே நேரத்தில் 0.17 என்ற இழுவை குணமும் எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச ரேஞ்ஜிற்கு காரணமாக இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. “இவ்வளவு சிறப்பு வசதிகள் இருந்து என்ன பயன். இது வெறும் கான்செப்ட் மாடல்தானே” என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பென்ஸ் நிறுவனம் இக்காரை கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியதோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

மிக விரைவில் இக்காரை உற்பத்திக்கு தயாராக்க திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், ஒற்றை சார்ஜில் 1000 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

பென்ஸ் நிறுவனம் இக்காருக்கு புதிய வடிவமைப்பு மொழியைப் பயன்படுத்தியிருப்பதை நம்மால் தெள்ள தெளிவாகக் காண முடிகின்றது. இதுவரை எந்த காரும் பெற்றிராத வகையிலான ஏரோடைனமிக்ஸ் தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான பாகங்கள் உள்ளிட்டவை விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

தொடர்ந்து, இந்த காரில் புதிய தலைமுறை தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மெட்டீரியல்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், புதிய ரக கார்பன் ஃபூட்பிரிண்ட்டுகள் இயற்கைக்கு உகந்த வகையில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

இந்த எலெக்ட்ரிக் காரை மிகவும் இலகு ரக வாகனமாகவும் உருவாக்கி இருப்பதாக பென்ஸ் தெரிவித்திருக்கின்றது. காரின் ஒட்டுமொத்த எடையே 1,750 கிலோவாக இருக்கின்றது. இந்த இலகு ரக எடைக்கு 50சதவீதம் குறைவான எடைக் கொண்ட பேட்டரிகளே காரணம் என கூறப்படுகின்றது.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

இந்த பேட்டரி எடை குறைவானதாக இருந்தாலும் வழக்கமான பேட்டரியைப் போன்று அதிக செயல் திறன்மிக்கது என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, எலெக்ட்ரிக் காரின் மேற்கூரையில் கூடுதலாக 25கிமீ ரேஞ்ஜ் வழங்கும் வகையில் சோலார் பேனல் வழங்கப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

இதுமட்டுமின்றி, 47.5 இன்ச் அளவுள்ள 8கே திறன் கொண்ட் ஓஎல்இடி திரை (உயர் ரக டிவியைப் போல் இது செயல்படும்), 3டி மேப், காக்டஸ் ரக லெதர், மூங்கிள் கார்பெட்டுகள் மற்றும் சிந்தட்டிக் சிஸ்க் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அம்சங்கள் எல்லாம் 2020ம் ஆண்டில் வெளியீடு செய்யப்பட்ட அவதார் கான்செப்ட் வாகனத்தை தழுவி கொடுக்கப்பட்டுள்ளன.

ஓராயிரம் கிமீ பயணிக்கும் மின்சார கார்... அட்டகாசமான திறன்களுடன் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் வெளியீடு!

மேலே பார்த்தது போன்று எண்ணற்ற சிறப்பு வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக் காராகவே விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது விற்பனைக்கு வரும்போது இன்னும் பல கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here