Home Sports விளையாட்டு செய்திகள் "கடந்த கால முடிவுகள் குறித்து சிந்திக்க விரும்பவில்லை" பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

"கடந்த கால முடிவுகள் குறித்து சிந்திக்க விரும்பவில்லை" பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

0
"கடந்த கால முடிவுகள் குறித்து சிந்திக்க விரும்பவில்லை" பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

[ad_1]

துபாய் வருவதற்கு முன்பாக பிரதமர் இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
 
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும். பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
 
இந்த நிலையில் துபாய் வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
 
image
இதுகுறித்து பாபர் அசாம் கூறுகையில், ”1992-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற அனுபவம், அப்போது இருந்த மனநிலை குறித்து இம்ரான் கான் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த கால முடிவுகள் குறித்து சிந்திக்க விரும்பவில்லை. சாதனைகள் என்பதே தகர்க்கக்கூடியது தான். இந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணியாக சாதிப்பதை எதிர்நோக்கியுள்ளோம். எப்போதுமே தொடரில் முதல் போட்டி முக்கியமானது. இதில் சிறப்பான தொடக்கம் கண்டு அதே உத்வேகத்தை தொடர்ந்து எடுத்து செல்வோம் என்று நம்புகிறோம்” என்றார்.
 
image
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ”‘பாகிஸ்தான் வலுவான அணி. அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ஒவ்வொரு முறையும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் அவர்களிடம் உள்ளனர். எனவே நாங்கள் நிச்சயம் தரமான ஆட்டத்தை களத்தில் காட்ட வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட் உடன் ஒப்பிடும் போது உலகக்கோப்பை போட்டிக்கான ஆடுகளங்கள் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here