HomeSportsவிளையாட்டு செய்திகள்கடைசி பந்தில் பவுண்டரி அடித்து பாகிஸ்தான் த்ரில் வெற்றி - 'ஒயிட்வாஷ்' ஆன வங்கதேசம்

கடைசி பந்தில் பவுண்டரி அடித்து பாகிஸ்தான் த்ரில் வெற்றி – 'ஒயிட்வாஷ்' ஆன வங்கதேசம்


கடைசி பந்தில் பவுண்டரி அடித்து பாகிஸ்தான் த்ரில் வெற்றி – 'ஒயிட்வாஷ்' ஆன வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை வென்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் பங்கேற்றது. இந்தத் தொடரில் நடைபெற்ற முதல் இரு டி20 ஆட்டங்களை வென்று தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான். டாக்காவில் இன்று நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் முகமது நயீம் 47 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம், உஸ்மான் காதிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

image

இதன்பிறகு வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரிஸ்வான் 40 ரன்களும் ஹைதர் அலி 45 ரன்களும் எடுத்தார்கள். கடைசி ஓவரில் வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டன. மஹ்முதுல்லா சிறப்பாக வீசி முதல் 3 பந்துகளுக்கு ரன் எதுவும் கொடுக்காமல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பரபரப்பை உண்டாக்கினார். இதனையடுத்து இஃப்திகார் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை மேலும் பதற்றத்தை உண்டாக்கினார்.

ஆனால் 5-வது பந்தில் இஃப்திகார் விக்கெட்டை வீழ்த்தினார் மஹ்முதுல்லா. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் அவருக்குக் கிடைத்தன. இதனால் கடைசிப் பந்தில் வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டன. நவாஸ் ஒரு பவுண்டரி அடித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link

puthiyathalaimurai.com

Web Team

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read