Home Sports விளையாட்டு செய்திகள் கரோனாவால் என் குடும்பத்தினரும் பாதி்க்கப்பட்டனர்; என்னால் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை: வருண் சக்ரவர்த்தி வேதனை | I still feel weak and dizzy: KKR spinner Varun Chakravarthy on COVID recovery

கரோனாவால் என் குடும்பத்தினரும் பாதி்க்கப்பட்டனர்; என்னால் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை: வருண் சக்ரவர்த்தி வேதனை | I still feel weak and dizzy: KKR spinner Varun Chakravarthy on COVID recovery

0

[ad_1]

கரோனாவில் இருந்து நான்குணமடைந்தபின்பும் என்னால் பயிற்சிக்குச் செல்ல முடியவில்லை. உடல் சோர்வாகவும், தலைசுற்றலாகவும் இருக்கிறது என்று தமிழக வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரருமான வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

14-வது ஐபிஎல் டி20 தொடர் கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-புள் சூழலில் நடந்தது. ஆனால், பல்வேறு கட்ட பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப்பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமூகத்தான் சென்றது.

ஆனால், 2-வது சுற்று தொடங்கியவுடன் கொல்கத்தா அணி வீரர் வருண் சக்ரவர்த்திக்குதான் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரு நாட்களி்ல் ஐபிஎல் டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள வருண் சக்ரவர்த்தி இன்னும் முழுமையாக தனது உடல் தேறவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

வருண் சக்ரவர்த்தி கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறேன். இன்னும் என்னால் பயிற்சியைத் தொடங்க முடியவில்லை. கரோனாவுக்கு பிந்தைய பிரச்சினைகள், அறிகுறிகளால் மிகவும் சிரமப்படுகிறேன். எனக்கு இருமல், காய்ச்சல் இல்லை. ஆனால், உடல் சோர்வு, தலைசுற்றல் தொடர்ந்து இருக்கிறது.

நாவில் சுவைஇழப்பு, மணம் இழப்பு இன்னும் விட்டுவிட்டு வருகிறது. ஆனால், விரைவில் பயிறச்சியைத் தொடங்குவேன் என நம்பிக்கையிருக்கிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்ட வீரர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு ஓய்வு எடுத்தபின் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும், தொடர்ந்து முகக்கவசம் அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும், அப்போது மற்றவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள், நீங்களும் பாதுகாப்பாக உணர முடியும்.

கரோனா வைரஸ் பாதிப்பில் மிகவும் வேதனைத் தரக்கூடிய மனரீதியான உளைச்சல்தான். நாம் தனிமையில் இருக்கும்போது குடும்பத்தினரை வி்ட்டு, சக அணியினரை விட்டு இருக்குமபோது கடுமையான மனஉளைச்சல் இருந்தது. அப்போது அந்த வேதனையிலிருந்து மீண்டுவருவதற்கு ஓஷோவின் நூல்களைத்தான் படித்தேன்.

நான் ஐபிஎல் போட்டியில் இருந்தபோது, எனக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லை. திடீரென ஒருநாள் லேசான சோர்வு வந்தது, அடுத்தநாள் லேசான காய்ச்சல் இருந்தது பயிற்சிக்குச் செல்லாமல், உடனடியாக அணி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு பிசிஆர் பரிசோதனைக்கு தயாரானேன். என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு முடிவுக்காகக் காத்திருந்தேன். மற்ற அணி வீரர்களும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது.

முதலில் எனக்குகவலையாக இருந்தது, என்னை நினைத்து மட்டுமல்ல நாட்டில் நடக்கும் சூழலும் எனக்கு வேதனையாக இருந்தது. என் குடும்பத்தில் சிலரும் கரோனாவில் பாதிக்கப்பட்டார்கள். அதைக் கடந்து வருவது எளிதானது அல்ல. ஆனால், தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் சாத்தியமான வழிகளை ஆய்வு செய்து கடந்து வர வேண்டும்.

நான் கரோனாவில் பாதி்க்கப்பட்டபோது, அணி நிர்வாகத்தினர் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டபின், எனக்கு இரு பரிசோதனைகளில் நெகட்டிவ் வந்தபின்புதான் என்னை வெளியேற அனுமதித்தார்கள்.

அணியின் நிர்வாகி ஷாருக்கான் ஒவ்வொரு வீரரிடமும் தனிப்பட்ட முறையில் பேசினார், நான் குணமடைந்தபின் என்னுடன் பேசி ஆறுதல் கூறினார்.

நான் கரோனாவிலிருந்து குணமடைந்தாலும், பலர் வாழ்க்கையை இழந்ததைப் பார்க்கும்போது கடினமாக இருக்கிறது. கடினமான நேரத்திலும் எனக்கு கிடைத்த சிறந்த சிகிச்சை முறையை நினைத்து பெருமைப்படுகிறேன் நன்றி கூறுகிறேன். கரோனாவில் பாதி்க்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

இவ்வாறு வருண் சக்ரவர்த்தி தெரிவி்த்தார்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here