Home சினிமா செய்திகள் கலர்ஸ் தமிழ் புதிதாக ஆரம்பித்து உள்ள அக்டோபர் மாத அட்டகாசங்கள் …வெரைட்டியான நிகழ்ச்சிகள் | New Programs and Serials Introducing in Colors Tamil Channel from October Month

கலர்ஸ் தமிழ் புதிதாக ஆரம்பித்து உள்ள அக்டோபர் மாத அட்டகாசங்கள் …வெரைட்டியான நிகழ்ச்சிகள் | New Programs and Serials Introducing in Colors Tamil Channel from October Month

0
கலர்ஸ் தமிழ் புதிதாக ஆரம்பித்து உள்ள அக்டோபர் மாத அட்டகாசங்கள் …வெரைட்டியான நிகழ்ச்சிகள் | New Programs and Serials Introducing in Colors Tamil Channel from October Month

[ad_1]

வலுவான கதைகளை

வலுவான கதைகளை

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய எங்க வீட்டு மீனாட்சி, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு அக்டோபர் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. ‘இனி தினம் தினம் கலர் கட்டும்’ என்ற தனது புதிய கேம்பெய்ன் மூலம் அதிக தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் வழியாக பெண்களையும் மற்றும் அவர்கள் குடும்பங்களையும் கொண்டாடுகிற வலுவான கதைகளை மக்களுக்கு வழங்குவதை இந்த சேனல் தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பார்வையாளர்களின் தற்காலத்தைய மற்றும் நடப்பு ஆர்வங்களோடு ஒத்திசைவு கொண்டதாக இந்நிகழ்ச்சிகள் இருக்கும்.

புதிய வடிவம்

புதிய வடிவம்

ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் ராஜாராம், “கலர் கட்டும் என்ற எமது கருத்தியலுக்கு ஏற்றவாறு புதுமையான கதைக்களம், கதாபாத்திரங்கள் மற்றும் முற்றிலும் புதிய வடிவம் ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த குடும்பங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த கலர்ஸ் தமிழ் பெரு விருப்பமும், உறுதியும் கொண்டிருக்கிறது.

குஷ்பு மற்றும் பிருந்தா

குஷ்பு மற்றும் பிருந்தா

பார்வையாளர்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் அளிக்கிற முற்போக்கான கருத்துகளை காட்சிப்படுத்துகிற அதே வேளையில், காலம் காலமாக இருந்துவருகிற தவறான புனைவுகளை உடைப்பதிலும் இந்த சேனல் எப்போதும் தீவிர ஆர்வத்தோடு இயங்கிவந்திருக்கிறது. பெண்களின் மாறுபட்ட பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. டான்ஸ் vs டான்ஸ் 2 நிகழ்ச்சி பற்றி கூறுவதென்றால், திறன் மிக்க பிரபல நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் ஆகியோரை டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்க செய்திருக்கிறோம்.

மாலைப்பொழுதில்

மாலைப்பொழுதில்

அதுபோலவே ரசிகர்களின் மனங்கவர்ந்த ஜீவா, ஶ்ரீத்தா சிவதாஸ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் எங்க வீட்டு மீனாட்சியில் முக்கிய கதாபாத்திரங்களாக இடம்பெறுகின்றனர். பிரைம் டைம் என கருதப்படும் பின் மாலைப்பொழுதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் செய்யப்பட்டிருக்கிற இந்த மாற்றமும் மற்றும் புதிதாக தொடங்கப்படுகிற இந்த இரு நிகழ்ச்சிகளும், இன்னும் துரிதமான முன்னேற்றத்தை நோக்கிய எமது பயணத்தை மேலும் ஊக்குவிக்கும் மற்றும் முன்னெடுத்துச் செல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.

ஷாம், ஶ்ரீதர், இனியா & அபிராமி

ஷாம், ஶ்ரீதர், இனியா & அபிராமி

டான்ஸ் vs டான்ஸ் என்பது கலர்ஸ் தமிழின் முதன்மையான டான்ஸ் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் பார்வையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் நான்கு குழுக்களின் உரிமையாளர்களாக நடிகர் ஷாம், நடன இயக்குநர் ஶ்ரீதர், நடிகை இனியா மற்றும் நடிகை அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நான்கு வெவ்வேறு குழுக்களுக்கு தலைமை ஏற்கின்றனர். நாடெங்கிலும் இருந்து இந்நிகழ்ச்சியில் அற்புதமான நடன திறன் கொண்ட கலைஞர்கள் பங்கேற்க விருப்பதால் டான்ஸ் ரியால்டி நிகழ்ச்சியில் புதிய சிகரங்களை இந்நிகழ்ச்சி தொடும் என்பதில் ஐயமில்லை.

மக்கள் மனங்கவர்ந்த

மக்கள் மனங்கவர்ந்த

இந்நிகழ்ச்சி பற்றி பேசிய பிரபல நடிகை குஷ்பு கூறியதாவது: “தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் தளத்தில் தனது புதுமையான நிகழ்ச்சிகளின் அணிவரிசையின் மூலம் புதிய அளவுகோல்களை கலர்ஸ் தமிழ் சேனல் தொடர்ந்து நிறுவி வருவதால் இச்சேனலோடு இணைந்து செயல்படுவது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. டான்ஸ் vs. டான்ஸ் சீசன் 1, ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த இரண்டாவது சீசனும் அதைப்போலவே மக்கள் மனங்கவர்ந்த வெற்றி நிகழ்ச்சியாக அமையும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.”

நடனத்தை நேர்த்தியாக

நடனத்தை நேர்த்தியாக

பிரபல நடன இயக்குனர் பிருந்தா பேசுகையில், “டான்ஸ் vs. டான்ஸ் சீசன் 1-லும் நான் பங்கேற்று வந்ததால் இதன் இரண்டாவது சீசனும், தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் தளத்தில் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியை அடுத்த நிலைக்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் திறன்மிக்க நடன கலைஞர்கள் அனைவருமே அற்புதமான நடனத் திறனை நேர்த்தியாக வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர்,” என்று கூறினார்.

விறுவிறுப்பாக

விறுவிறுப்பாக

காரைக்குடி நகரை பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் கதையான எங்க வீட்டு மீனாட்சி, கடந்த காலத்திலிருந்து தொடர்கின்ற பகைமையை கொண்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் சிதம்பரம் ஆகிய கதாப்பாத்திரங்களை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. மீனாட்சிக்கும், சிதம்பரத்திற்கும் இடையே உறவு எப்படி மலர்கிறது மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இடையே உள்ள பிணக்குகளையும், வேறுபாடுகளையும் எப்படி சரிசெய்கின்றனர் என்று விறுவிறுப்பாக கதை நகர்கிறது. ஶ்ரீதா சிவதாஸ் (மீனாட்சி) மற்றும் ஜீவா (சிதம்பரம்) முன்னணி கதாபாத்திரங்களாக இந்த நெடுந்தொடரில் பங்கேற்க, கதைக்கு வலுவூட்டும் பிற துணை கதாபாத்திரங்களாக பூர்ணிமா பாக்கியராஜ் (வள்ளியம்மா), ஆடுகளம் நரேன் (தேவநாயகம்) ராஜ் கபூர் (மெய்யப்பன்), பாவா லட்சுமணன் (நலபாகம் நாகராஜ்) மற்றும் கு.ஞானசம்பந்தன் ஆகிய பிரபலங்கள் இடம்பெறுகின்றனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here