Home Sports விளையாட்டு செய்திகள் கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்தல் – இந்தியா 345-க்கு ஆல் அவுட்

கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்தல் – இந்தியா 345-க்கு ஆல் அவுட்

0
கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்தல் – இந்தியா 345-க்கு ஆல் அவுட்

[ad_1]

கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான இன்று ஸ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களிலும், ஜடேஜா 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

image

விருத்திமான் சாஹா, அக்சர் படேல் இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரையில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வின் 38 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பின்பு தொடர்ந்து விளையாடிய இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்வின் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதீ 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அடுத்தபடியாக ஜேமிசன் 3 விக்கெட்டும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். நியூசிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

[ad_2]

Source link

puthiyathalaimurai.com

Web Team

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here