Home தமிழ் News ஆரோக்கியம் கார்னியல் நோய்களைத் தவிர்ப்பது எப்படி? – ஹெல்த் அலர்ட் | How to avoid corneal diseases?

கார்னியல் நோய்களைத் தவிர்ப்பது எப்படி? – ஹெல்த் அலர்ட் | How to avoid corneal diseases?

0
கார்னியல் நோய்களைத் தவிர்ப்பது எப்படி? – ஹெல்த் அலர்ட் | How to avoid corneal diseases?

[ad_1]

கண் கருவிழியின் முன்பகுதியை மூடும் ஒரு தெளிவான அடுக்கு கார்னியா என்று அழைக்கப்படுகிறது. இது வெளிப் பொருள்களிலிருந்து கண்ணைப் பாதுகாக்கிறது; ஒளியின் தன்மைக்கேற்ப பார்வையை மேம்படுத்துகிறது; கண்ணைப் புற ஊதாக் கதிர் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.

வெளிப்புறக் கண் நோய்கள், கண்களின் வெளிப்புறத்தையும் மேற்பரப்பையும் பாதிக்கக்கூடியவை. பொதுவாக, கார்னியல் நோய் என்பது கண்ணுக்கு முன்னால் உள்ள தெளிவான படலத்தைப் பாதிக்கும் நிலையைக் குறிக்கிறது. கண் அசௌகரியம், பார்வை மங்குதல், கண் சிவந்துபோதல் அல்லது கண் கூச்சம் ஆகியவை இவற்றின் சில அறிகுறிகள்.

தவிர்ப்பது எப்படி? – ஆபத்துக் காரணிகளைக் குறைப்பதன் மூலம் பல கார்னியல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பல தொற்று நோய்களைத் தவிர்ப்பதற்கான எளிய நுட்பம் கண் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பராமரிப்பதே.

உதாரணமாக, சிற்றம்மை நோய் (ஷிங்கிள்ஸ்) தீவிரமடைவது அல்லது அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவதை மட்டுப்படுத்தத் தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்டு சிற்றம்மையைத் தடுத்துக்கொண்டால், ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஆப்தல்மிகஸ் எனப்படும் கண் நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தடுத்துக்கொள்ளலாம். இதுபோல் பல வழிகள் உள்ளன. கண்களை எப்போதும் ஆரோக்கியமாகப் பராமரிப்பதும், நோய் அறிகுறிகள் தீவிரமடைந்தால் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியதும் மிக முக்கியம்.

பொதுவாக காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் தீவிர கண் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவதற்கான சாத்தியம் மிக அதிகம். எனவே, உரிய வழிகாட்டுதல் படி அடிக்கடி காண்டாக்ட் லென்ஸ்களை அவர்கள் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆபத்துகள்… காரணங்கள்…

கார்னியல் நோய் பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். மரபியல் (பரம்பரை) காரணங்கள், நோய்த்தொற்று, காயம், ஆட்டோ இம்யூன் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், ஒவ்வாமை, இரண்டாம் நிலை மருத்துவக் காரணங்கள், திடீர் வளர்ச்சிகள், கட்டிகள் போன்றவை மேற்கூறிய கண் நோய்களுக்குக் காரணமாகின்றன.

கண் ஒவ்வாமை அல்லது மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் மோசமடைந்தால் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதனை செய்து கொள்வதும் அவரது அறிவுரை யைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியம். கார்னியல் தொற்றுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது, நிலைமையின் தீவிரத்தையும் அதன் மோசமான விளைவுகளையும் குறைக்கிறது. பார்வை பாதிக்கப் படாமல், நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறது.

> இது, கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.செளந்தரம் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here