Homeதமிழ் Newsஆட்டோமொபைல்குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது...

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் அடுத்தடுத்தாக புதிய இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் புதிய இருசக்கர வாகன மாடல்களில் மலிவு விலை ஹிமாலயன் (Himalayan) மாடலும் ஒன்று.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

தற்போது நிறுவனத்தின்கீழ் விற்பனையில் இருக்கும் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றாக ஹிமாலயன் ஏடிவி இருக்கின்றது. அட்வென்சர் மற்றும் ஆஃப் ரோடு பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம் இது. ஆனால், தற்போது புதிதாக குறைந்த விலையில் உருவாகி வரும் ஹிமாலயன் சாலை பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

அதாவது, அட்வென்சர் பயணத்திற்கு உகந்த அம்சங்களுக்கு பதிலாக சாலை போக்குவரத்திற்கு பெரிதும் உதவக் கூடிய அம்சங்களை மட்டுமே இப்பைக் பெற இருக்கின்றது. இந்த பைக்கின் அறிமுகமே எப்போது என்கிற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. எச்டி ஆட்டோ வெளியிட்டிருக்கும் செய்தியின்படி இப்பைக் பிப்ரவரி 2022 இல் வெளியாகும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

ஸ்கிராம் 411 என்ற குறிப்பிடப்படும் இப்பைக் என்ன பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை மட்டுமின்றி அடுத்த ஆண்டு இன்னும் சில மாடல்களையும் விற்பனைகக்குக் களமிறக்க இருக்கின்றது.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

ஹிமாலயன் ஏடிவி தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்கிராம் 411 பைக்கில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. அதேநேரத்தில், இந்த பைக்கின் வெளிப்புற தோற்றத்தில் சில மாற்றங்கள் இடம் பெற்றிருப்பதாக இணையத்தின் வாயிலாக வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

கடந்த காலங்களில் இப்பைக் சோதனையோட்டத்தின்போது கேமிராவின் கண்களில் சிக்கின. ஆனால், முழு மறைப்புகளுடன் அது சிக்கியதனால், அப்பைக்கில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலை உறுதியாக எங்களால் தெரிவிக்க முடியவில்லை.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

அதேநேரத்தில் ஹிமாலயன் பைக்கில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் சில இதில் இடம் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது. முக்கியமாக அதன் தோற்றம் ஸ்டைல் உள்ளிட்டவை ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அதேவேலையில், சில தனித்துவமான அணிகலன்களைப் பெற்றிருக்கின்றது.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

நீளமான விண்ட்ஸ்கிரீன், ஸ்பிளிட் இருக்கை, வழக்கமான லக்கேஜ் ரேக், பெரிய முன் பக்க வீல் ஆகிய அம்சங்களை பெறாததை ஸ்பை படங்களே உறுதிப்படுத்துகின்றன. இவற்றிற்கு மாற்றாக சிறிய வீல்கள், லெஸ்ஸர் சஸ்பென்ஷன் டிராவல், சிங்கிள் இருக்கை அமைப்பு மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களுக்கான ஹேண்டில் உள்ளிட்டவை இப்பைக்கில் இடம் பெற இருக்கின்றன.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

புதிய மலிவு விலை ஹிமாலயன் பைக்கில் எல்எஸ்410, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் எஸ்ஏஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்ஜின் 411 சிசி திறனை வெளியேற்றக் கூடியது. தொடர்ந்து, விலையைக் குறைக்கும் பொருட்டு சில அம்ச குறைப்பு வேலையும் இந்த பைக்கில் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறைந்த விலை ஹிமாலயன் Scram 411 அறிமுகம் எப்போது? ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் இப்போது வெளியீடு!

இத்தகைய ஓர் பைக்காகவே குறைந்த விலை ஹிமாலயன் இந்தியர்களுக்காக உருவாகி வருகின்றது. இதன் அறிமுகம் தற்போது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அரங்கேற இருப்பதாக வெளியாகியிருக்கும் உறுதி வாய்ந்த தகவல்கள் இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹிமாலயன் பைக் பிரியர்கள் மத்தியில் இந்த தகவல் இனம் புரியா சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுமட்டுமின்றி ஒட்டுமொத்த ராயல் என்பீல்டு இருசக்கர வாகன பிரியர்களையும் மகிழ்விக்கும் வகையில் நிறுவனம் சில புதுமுக வாகனங்களையும் அடுத்த 2022ம் ஆண்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read